கார்
பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ்.

பி.எம்.டபிள்யூ. இரு எலெக்ட்ரிக் கார்கள் விற்றுத்தீர்ந்தன

Update: 2022-01-01 06:59 GMT
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் ஐ4 மற்றும் ஐ.எக்ஸ். எலெக்ட்ரிக் கார் மாடல்கள் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.


பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆலிவர் சிப்சி ஐ4 மற்றும் ஐ.எக்ஸ். கார்கள் விற்றுத்தீர்ந்ததாக அறிவித்துள்ளார். 'ஐ.எக்ஸ். போன்றே ஐ4 மாடலும் மாத கணக்கில் விற்றுத்தீர்ந்தது. இதனால் பணி திறனை ஐந்து மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்,' என அவர் மேலும் தெரிவித்தார். 

ஐ4 மற்றும் ஐ.எக்ஸ். எலெக்ட்ரிக் கார்கள் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை எலெக்ட்ரிக் கார் தொழில்நுட்பத்தை பரைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இதுவரை பி.எம்.டபிள்யூ. நிறுவனம் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிக பிளக்-இன் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. 2025 ஆண்டிற்குள் மற்றொரு பத்து லட்சம் யூனிட்களை விற்பனை செய்ய பி.எம்.டபிள்யூ. இலக்கு நிர்ணயித்துள்ளது.பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ். டிரைவ் 50 மாடலை முழு சார்ஜ் செய்தால் 521 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. ஐ4 இ-டிரைவ் 40 மாடலை முழு சார்ஜ் செய்தால் 484 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.
Tags:    

Similar News