ஆட்டோமொபைல்

இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்த மாருதி கார்

Published On 2019-04-12 11:42 GMT   |   Update On 2019-04-12 11:42 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் செலரியோ கார் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்திருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. #MarutiSuzuki



மாருதி சுசுகி செலரியோ கார் இந்திய சந்தையில் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்திருக்கிறது. 2018-19 நிதியாண்டில் மட்டும் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் சுமார் 1,03,734 செலரியோ கார்களை விற்பனை செய்திருக்கிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது பத்து சதவிகிதம் அதிகம் ஆகும்.

2014 ஆம் ஆண்டு முதல் மாருதி நிறுவனம் சுமார் 4.7 லட்சம் மாருதி சுசுகி செலரியோ கார்களை விற்பனை செய்திருக்கிறது. ஆட்டோமேட்டெட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாருதி நிறுவனத்தின் முதல் கார் செலரியோ ஆகும். மாருதி நிறுவனம் இதனை ஆட்டோ கியர் ஷிஃப்ட் என அழைக்கிறது. 



இதுவரை விற்பனையாகி இருக்கும் செலரியோ யூனிட்களில் சுமார் 31 சதவிகிதம் ஆட்டோ கியர் ஷிஃப்ட் வசதி கொண்டவையாகும். இதுதவிர டாப் எண்ட் மாடலான ZXI வேரியண்ட் மொத்த விற்பனையில் 52 சதவிகிதமும் செலரியோ சி.என்.ஜி. வேரியண்ட் 20 சதவிகிதமும் விற்பனையாகி இருக்கிறது.

மாருதி சுசுகி செலரியோவின் அனைத்து வேரியண்ட்களிலும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், டிரைவர் ஏர்பேக், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் சிஸ்டம், பெல்ட் ரிமைண்டர், ஹை-ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகின்றன. என்ஜினை பொருத்தவரை செலரியோ மாடலில் 1.0-லிட்டர் K-சீரிஸ், 3-சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் கொண்டிருக்கிறது.

இந்த என்ஜின் 67 பி.ஹெச்.பி. பவர், 90 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆட்டோ கியர் ஷிஃப்ட் விரும்புவோர் தேர்வு செய்யும் வகையில் வழங்கப்படுகிறது. செலரியோ கார் சி.என்.ஜி. வசதியுடன் கிடைக்கிறது. 
Tags:    

Similar News