ஆட்டோமொபைல்

டாடாவின் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் இந்த பெயரில் அறிமுகமாகும் என தகவல்

Published On 2019-02-23 10:27 GMT   |   Update On 2019-02-23 10:27 GMT
டாடா நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலாக உருவாகி வரும் 45X கார் இந்த பெயரில் தான் அழைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. #Tata45X



டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் புதிய கார் மாடல் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த கார் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலாக இருக்கும் என்றும் இது அந்நிறுவனத்தின் 45X கான்செப்ட் மாடலாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

டாடா 45X கான்செப்ட் மாடல் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் ஹேரியர் கான்செப்ட் காருடன் அறிமுகமானது. சமீபத்தில் டாடா ஹேரியர் எஸ்.யு.வி. கார் இந்தியாவில் அறிமுகமானது. இந்தியாவில் புதிய ஹேரியர் எஸ்.யு.வி. காரின் விலை ரூ.12.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய டாடா 45X பிரீமியம் ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் ஜூன் மாத வாக்கில் விற்பனைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. ஆனால் டாடா 45X கார் கார் இந்தியாவில் பலமுறை சோதனை செய்யப்பட்டுள்ளது.



இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் டாடா 45X கார் அக்யூலா என அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் தனது சமூக வலைதள பக்கங்களில் பொது மக்களிடம் தனது புதிய கார் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்ற கேலஅவியை எழுப்பி, அதற்கான முதல் எழுத்தாக 'A' என தெரிவித்துள்ளது. 

புதிய காரின் பெயர் இத்தாலிய மொழியில் இருக்கும் என்றும் இதற்கு அக்யூலா சரியானதாக இருக்கும் என கூறப்படுகிறது. இத்தாலிய மொழியில் அக்யூலா என்றால் தமிழில் கழுகு என்று பொருள்படும்.

டாடா புதிய ஹேட்ச்பேக் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின்களில் நெக்சனை விட சற்று அதிக செயல்திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரான்ஸ்மிஷனை பொருத்த வரை 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.
Tags:    

Similar News