ஆட்டோமொபைல்

இந்தியாவில் அமோக வரவேற்பு பெற்று வரும் மாருதி எர்டிகா

Published On 2019-01-04 10:26 GMT   |   Update On 2019-01-04 10:26 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் புத்தம் புதிய எர்டிகா கார் மாடல் இந்தியாவில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. #MarutiSuzuki



மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் புத்தம் புதிய எர்டிகா கார் மாடலை கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் ரூ.7.44 லட்சம் விலையில் அறிமுகமான புதிய எர்டிகா கார் இந்தியாவில் ஒரே வாரத்தில் 10,000 முன்பதிவுகளும் முதல் மாதத்தில் மட்டும் சுமார் 23,000-க்கும் அதிக முன்பதிவுகளை பெற்றது.

அந்த வகையில் புதிய எர்டிகா கார் தற்சமயம் முன்பதிவு செய்வோர் காரை பெற அதிகபட்சம் நான்கு மாதங்களுக்கு காத்திருக்க வேண்டும் என தெரிகிறது. புதிய தலைமுறை மாருதி எர்டிகா கார் மாருதி நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய எர்டிகா முந்தைய மாடல்களைவிட நீளமாகவும், அகலமாகவும், எடை குறைவாகவும் இருக்கிறது.
 
முற்றிலும் புதிய வடிவமைப்புடன், முந்தைய மாடல்களை விட அதிக உபகரணங்களை கொண்டுள்ளது. காரின் முன்பக்கம் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், கிரில் டிசைன், ஸ்போர்ட் பம்ப்பர்கள், ஃபாக் லேம்ப்களும், பக்கவாட்டில் 16-இன்ச் அலாய் வீல்கள், ஸ்விஃப்ட் மாடலில் உள்ளதை போன்றே கோடுகள் இடம்பெற்றிருக்கிறது.



புதிய மாருதி எர்டிகா மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்கள்: 1.5 லிட்டர் பெட்ரோல், 1.3 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் முன்னதாக மேம்படுத்தப்பட்ட சியாஸ் செடான் மாடலில் வழங்கப்பட்டு இருந்தது. புதிய பெட்ரோல் என்ஜின் 1.3 பி.ஹெச்.பி. பவர், 138 என்.எம். டார்கியூ செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 4-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

டீசல் என்ஜின் 1.3 லிட்டர் DDiS யூனிட் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்கியூ செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

புதிய எர்டிகா எம்.பி.வி. மாடல் புதிய பியல் மெட்டாலிக் ஆபன் ரெட், மெட்டாலிக் மேக்மா கிரே, பியல் மெட்டாலிக் ஆக்ஸ்ஃபோர்டு புளு, பியல் ஆர்க்டிக் வைட் மற்றும் மெட்டாலிக் சில்க்கி கிரே என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News