ஆட்டோமொபைல்

இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் மாடல்களின் புதிய விலை

Published On 2018-08-19 10:30 GMT   |   Update On 2018-08-19 10:30 GMT
இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் கார் மாடல்களின் விலை மாற்றப்படுகிறது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #MercedesBenz


இந்தியாவின் பிரபல ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமாக அறியப்படும் மெர்சிடிஸ் பென்ஸ் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தனது கார் மாடல்களின் விலையை உயர்த்துகிறது.

நிர்வாக கட்டண செலவீனங்கள் அதிகரித்திருப்பதே திடீர் விலை உயர்வுக்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த எட்டு மாதங்களில் யூரோவுக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ஐந்து சதவிகிதம் வரை குறைந்திருப்பதும், ரெபோ கட்டணம் கடந்த சில மாதங்களில் 0.5 சதவிகிதம் வரை அதிகரித்து இருக்கிறது.

இவை அனைத்தும் மெர்சிடிஸ் இந்தியா தனது வாகனங்களின் விலையை உயர்த்த காரணமாக தெரிவித்துள்ளது. 

செலவீன கட்டணங்கள் விலை உயர்வு மற்றும் ஃபோரெக்ஸ் கட்டணங்கள் எதிர்பார்த்தபடி இல்லாதது போன்றவை விலை உயர்வுக்கு காரணமாக அமைந்து விட்டது என மெர்சிடிஸ் இந்தியா நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ரோலாண்ட் ஃபோல்ஜர் தெரிவித்தார்.

இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால் எங்களுக்கு குறைவான நடவடிக்கைகளில் நிலைமையை கட்டுக்குள் வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் மாடல்களின் விலை மாற்றம் செய்வதே தீர்வாக இருக்கும் என மெர்சிடிஸ் பென்ஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News