பைக்

பொங்கல் பண்டிகையை ஒட்டி அசத்தல் சலுகைகள் அறிவித்த யமஹா

Published On 2023-01-12 10:04 GMT   |   Update On 2023-01-12 10:04 GMT
  • யமஹா நிறுவனம் தமிழ் நாட்டில் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
  • பொங்கல் பண்டிகையை ஒட்டி அறிவிக்கப்பட்டு இருக்கும் சிறப்பு சலுகைகள் இம்மாத இறுதிவரை வழங்கப்பட இருக்கின்றன.

இந்திய சந்தையில் முன்னணி இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளராக இருக்கும் யமஹா மோட்டார் இந்தியா தமிழ் நாட்டு வாடிக்கையாளர்களுக்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகைகள் ஜனவரி 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். தற்போது பொங்கல் பண்டிகை சிறப்பு சலுகைகள் யமஹா FZ மற்றும் ஃபசினோ 125சிசி ஹைப்ரிட் மாடலின் டிரம் வேரியண்டிற்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

சலுகை விவரங்கள்:

யமஹா FZ மாடலை வாங்குவோருக்கு ரூ. 7 ஆயிரம் வரை கேஷ்பேக், ரூ. 7 ஆயிரத்து 999 முன்பணம், மாதம் ரூ. 1999 எனும் குறைந்த மாத தவணை முறை மற்றும் 0 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

யமஹா ஃபசினோ 125 Fi ஹைப்ரிட் டிரம் மாடலை வாங்கும் போது ரூ. 1500 வரை கேஷ்பேக், ரூ. 3 ஆயிரத்து 999 எனும் மிக குறைந்த முன்பணம், மாதம் ரூ. 1999 எனும் மாத தவணை, 0 சதவீத வட்டி போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகள் தமிழ் நாட்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சலுகைகள் யமஹா விற்பனை மையங்களில் பெற முடியும். இதுபற்றிய கூடுதல் விவரங்களை யமஹா விற்பனை மையங்களில் அறிந்து கொள்ள முடியும்.

150சிசி யமஹா FZ சீரிசில் சக்திவாய்ந்த ஏர் கூல்டு 4 ஸ்டிரோக் 149சிசி, SOHC, 2 வால்வுகள் கொண்ட சிங்கில் சிலிண்டர் ஃபியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 12.4 பிஎஸ் பவர், 13.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

யமஹா ஃபசினோ ஹைப்ரிட் மாடலில் ஏர் கூல்டு, 4 ஸ்டிரோக் SOHC, இரண்டு வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.2 பிஎஸ் பவர், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதுதவிர ஏராளமான பயனுள்ள அம்சங்கள் இந்த மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News