பைக்

சத்தமின்றி MT 15 V2 விலையை மாற்றிய யமஹா

Published On 2022-10-08 12:06 GMT   |   Update On 2022-10-08 12:06 GMT
  • யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் தனது MT 15 V2 விலையை மாற்றியமைத்து இருக்கிறது.
  • புதிய விலை MT 15 V2 அனைத்து நிற வேரியண்ட்களுக்கும் பொருந்தும் என யமஹா தெரிவித்து இருக்கிறது.

யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் அக்டோபர் மாதம் MT 15 V2 மோட்டார்சைக்கிள் விலையை இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு யமஹா MT 15 V2 அனைத்து நிற வேரியண்ட்களுக்கும் பொருந்தும். இம்முறை யமஹா MT 15 V2 மாடலின் விலை ரூ. 500 அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஆகஸ்ட் மாத வாக்கில் யமஹா இதே மாடல் விலையை ரூ. 1500 உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய விலை விவரம்:

யமஹா MT 15 V2 மெட்டாலிக் பிளாக் ரூ. 1 லட்சத்து 63 ஆயிரத்து 900

யமஹா MT 15 V2 ஐஸ் புளோ, ரேசிங் புளூ ரூ. 1 லட்சத்து 64 ஆயிரத்து 900

யமஹா MT 15 V2 மோட்டோ ஜிபி எடிஷன் ரூ. 1 லட்சத்து 65 ஆயிரத்து 900

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

விலை தவிர யமஹா MT 15 V2 அம்சங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த மாடல் 155 சிசி, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 18.14 ஹெச்பி பவர், 14.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் யமஹா MT 15 V2 மாடலில் அப்சைடு-டவுன் போர்க்குகள், அலுமினியம் ஸ்விங் ஆரம், பிரேக்கிங்கிற்கு சிங்கில் டிஸ்க் மற்றும் சிங்சில் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் எல்இடி ஹெட்லேம்ப், டெயில் லேம்ப், எல்சிடி கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, 10 லிட்டர் பியூவல் டேன்க் வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News