பைக்
முழுவதும் தங்கத்தாலான சுசுகி நிறுவனத்தின் சூப்பர் பைக் - விலை எவ்வளவு தெரியுமா?
- இந்த பைக்கில் தங்க முலாம் பூசுவதற்கு மட்டும் ரூ. 13.3 லட்சம் செலவாகியுள்ளது.
- இந்த பைக்கில் 360-சைஸ் அளவிலான மிகப்பெரிய டயர் பொருத்தப்பட்டுள்ளது.
துபாயில் நடைபெற்ற சர்வதேச வாகன கண்காட்சியில் சுசுகி நிறுவனத்தின் முழுவதும் தங்கத்தாலான சூப்பர் பைக் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த சூப்பர் பைக் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த பைக்கின் விலை ரூ 1.67 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில் தங்க முலாம் பூசுவதற்கு மட்டும் ரூ. 13.3 லட்சம் செலவாகியுள்ளது.
இந்த பைக்கில் 360-சைஸ் அளவிலான மிகப்பெரிய டயர் பொருத்தப்பட்டுள்ளது. இதில் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 400 ஹார்ஸ் பவர் கொண்ட எஞ்சின் உள்ளது. இந்த பைக் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.