பைக்

மூன்று புதிய நிறங்களில் அறிமுகமான ஹிமாலயன் - ராயல் என்பீல்டு அதிரடி!

Published On 2022-11-25 10:13 GMT   |   Update On 2022-11-25 10:13 GMT
  • ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் மூன்று புது நிறங்களில் கிடைக்கிறது.
  • புதிய நிறம் கொண்ட ஹிமாலயன் மாடல்களின் விலை ரூ. 2 லட்சத்து 16 ஆயிரம் என துவங்குகிறது.

ராயல் என்பீல்டு நிறுவனம் தனது ஹிமாலயன் மோட்டார்சைக்கிளை மூன்று நிறங்களில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2023 ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் கிலேசியர் புளூ, ஸ்லீட் பிளாக் மற்றும் டியூன் பிரவுன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை ரூ. 2 லட்சத்து 15 ஆயிரத்து 900, எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

புதிய ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் டி-பாஸ்டு லோகோ மற்றும் யுஎஸ்பி போர்ட்களை கொண்டிருக்கிறது. இதன் கிளேசியர் புளூ நிற வேரியண்ட் இமய மலை பகுதிகளில் இருக்கும் அதிக தெளிவான கிளேசியர் ஏரியை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதாக ராயல் என்பீல்டு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

ராயல் என்பீல்டு நிறுவனம் ஸ்லீட் பேட்டனை மீண்டும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. எனினும், இம்முறை பிளாக் வெர்ஷனில் கொண்டுவந்துள்ளது. இந்த டிசைன் பாறைகளின் மீது காணப்படும் ரேசர் ஷார்ப் க்லிஸ்டெனிங் ஸ்லீட்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹிமாலயன் மாடலின் என்ஜினில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த மாடலில் 411 சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 24.3 ஹெச்பி பவர், 32 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News