பைக்

கிளாசிக் 350 பாபர் மாடலை உருவாக்கும் ராயல் என்பீல்டு

Published On 2022-11-29 09:14 GMT   |   Update On 2022-11-29 09:14 GMT
  • ராயல் என்பீல்டு நிறுவனம் உருவாக்கி வரும் புதிய கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் விவரங்கள் வெளியாகி உள்ளது.
  • இந்த மாடலிலும் 349சிசி, ஜெ பிளாட்ஃபார்ம் என்ஜின் தான் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ராயல் என்பீல்டு நிறுவனம் ஏற்கனவே பயன்படுத்தி வரும் பிளாட்ஃபார்ம் மட்டுமின்றி புதிய பிளாட்ஃபார்ம்களில் ஏராளமான புது மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கி வருகிறது. இவற்றில் பாபர்-ஸ்டைல் மாடல் ஒன்று ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஜெ பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த மோட்டார்சைக்கிள் பற்றிய முழு விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

எனினும், இந்த மோட்டார்சைக்கிள் கிளாசிக் 350 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பது மட்டும் உறுதியாகி இருக்கிறது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல் என்ற வகையில் புது பைக்கின் ஸ்டைலிங் கிளாசிக் 350 மாடலை தழுவி இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த மாடலின் மாதிரி படத்தின் படி வட்ட வடிவ ஹெட்லைட், பீக்-ஸ்டைல் எலிமண்ட் வழங்கப்படுகிறது.

இத்துடன் நீர்-துளி வடிவ ஃபியூவல் டேன்க், ரைடருக்கான இருக்கை, ஆப்-ஹேங்கர் ஹேண்டில்பார், ரியர் ஃபெண்டர் மவுண்ட் செய்யப்பட்ட டெயில்-லைட், வயர் ஸ்போக் வீல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் ஹார்டுவேர் கிளாசிக் 350 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. அந்த வகையில், இது டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் ட்வின் ஸ்ப்ரிங்குகள் வழங்கப்படலாம்.

இதன் பேஸ் மாடலில் டிரம் பிரேக் செட்டப், பிரீமியம் வேரியண்ட்களில் இருபுறமும் டிஸ்க் பிரேக் செட்டப் வழங்கப்படலாம். மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 349சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 20 ஹெச்பி பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பாபர் ஸ்டைல் மாடலின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இங்கு அறிமுகமானதும் யெஸ்டி பாபர் மாடலுக்கு போட்டியாக அமையும். மேலும் இது புதிய ராயல் என்பீல்டு புல்லட் 350 வெளியீட்டிற்கு பின் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

Photo Courtesy: bikewale

Tags:    

Similar News