பைக்
null

மிடில்வெயிட்-இல் மல்லுக்கட்டும் நிறுவனங்கள்.. விரைவில் களமிறங்கும் புது பைக் மாடல்கள்..

Published On 2023-11-21 09:56 GMT   |   Update On 2023-11-21 10:13 GMT
  • ஹிமாலயன் 450 மாடலில் 452சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது.
  • அப்ரிலியா RS457 அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.

இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் மிடில்வெயிட் மோட்டார்சைக்கிள்கள் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இளம் வாடிக்கையாளர்களில் பலரும் டூரிங் மற்றும் ஆஃப் ரோடிங் என பைக் ரைடிங்கில் அதிக ஆர்வம் செலுத்த துவங்கியுள்ளதும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இதையொட்டி பஜாஜ், டிரையம்ப், ராயல் என்பீல்டு என இருசக்கர வாகன உற்பத்தியாளர்களும் இந்த பிரிவில் கவனத்தை திருப்பி உள்ளன. அதன்படி ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் 450 மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

நவம்பர் 24-ம் தேதி நடைபெற இருக்கும் மோட்டோவெர்ஸ் 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஹிமாலயன் 450 மாடலில் முற்றிலும் புதிய 452சிசி, சிங்கில் சிலிண்டர் DOHC லிக்விட் கூல்டு Fi என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 40.02 பி.எஸ். பவர், 40 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என்று தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

இந்த மாடலில் வட்ட வடிவம் கொண்ட டி.எஃப்.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், ரைடு மோட்கள், ஸ்விட்ச் செய்யக்கூடிய ரியர் ஏ.பி.எஸ்., ஸ்லிப் / அசிஸ்ட் கிளட்ச், யு.எஸ்.டி. முன்புற ஃபோர்க்குகள், மோனோஷாக் ரியர் சஸ்பென்ஷன், எல்.இ.டி. லைட்டிங் வழங்கப்படுகிறது. இத்துடன் டூயல் சேனல் ஏ.பி.எஸ். சிஸ்டம், அகலமான ஹேண்டில்பார், பெரிய ஃபியூவல் டேன்க், யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட் வழங்கப்படும் என தகவல்.

ராயல் என்பீல்டு நிறுவனம் தவிர அப்ரிலியா இந்தியா தனது அதிகம் எதிர்பார்க்கப்படும் RS457 மாடலை அடுத்த மாதமோ அல்லது 2024 துவக்கத்திலோ அறிமுகம் செய்யலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச சந்தையில் இந்த மாடலின் விலை விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. இந்தியாவில் இதன் விலை ரூ. 3.8 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். 

Tags:    

Similar News