பைக்

நாடு முழுக்க 100 பிரீமியம் விற்பனை மையங்கள் - யமஹா அசத்தல்

Published On 2022-11-02 14:25 IST   |   Update On 2022-11-02 14:25:00 IST
  • யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் புளூ ஸ்கொயர் பெயரில் பிரத்யேக விற்பனை மையங்களை கட்டமைத்து வருகிறது.
  • நாடு முழுக்க யமஹா புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் மூலம் சர்வதேச மாடல்களை விற்பனை செய்ய யமஹா திட்டமிட்டுள்ளது.

இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் நாடு முழுக்க 100 புளூ ஸ்கொயர் விற்பனை மையங்களை கட்டமைத்துள்ளது. இந்திய சந்தையில் ரிடெயில் விற்பனையை உறுதிப்படுத்த 3s நெட்வொர்க்கை யமஹா புளூ தீமிற்குள் கொண்டு வரவும் யமஹா திட்டமிட்டுள்ளது.

இதுமட்டுமின்றி புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் யமஹா சர்வதேச சந்தையில் விற்பனை செய்யும் மாடல்களை இந்தியாவுக்கு கொண்டுவரும் என யமஹா தெரிவித்துள்ளது. எந்தெந்த மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும், யமஹா டெனர் 700 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் ஒற்றை களமாக புளூ ஸ்கொயர் விற்பனை மையம் துவங்கப்பட்டது. யமஹாவின் ரேசிங் டிஎன்ஏவுடன் வாடிக்கையாளர்கள் இணையும் நோக்கில் புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. யமஹா உருவாக்கி இருக்கும் புளூ ஸ்டிரீக்ஸ் ரைடர் குழுவில் வாடிக்கையாளர்கள் இணையவும் புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் பாலமாக செயல்படுகின்றன.

இந்தியாவில் ஒவ்வொரு புளு ஸ்கொயர் விற்பனையகமும் யமஹா நிறுவனத்தின் பிரீமியம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்கள்- யமஹா YZF R15M, யமஹா ஏரோக்ஸ் 155 போன்ற மாடல்களை காட்சிப்படுத்தி வருகின்றன. இத்துடன் புளூ ஸ்கொயர் விற்பனை மையங்களில் யமஹாவின் சர்வதேச மாடல்களை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News