பைக்

இந்தியாவில் அறிமுகமான புது ஹோண்டா பைக் - என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?

Update: 2022-08-09 09:13 GMT
  • ஹோண்டா நிறுவனத்தின் புதிய CB300F மோட்டார்சைக்கிள் பிரீமியம் பிங்விங் விற்பனை மையங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது.
  • இந்த மாடல் டீலக்ஸ் மற்றும் டீலக்ஸ் ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய CB300F ஸ்டிரீட் பைக் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மோட்டார்சைக்கிள் CB300R மாடலின் கீழ் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதன் விலை ரூ. 2 லட்சத்து 26 ஆயிரம் என துவங்குகிறது.

விலை விவரங்கள்:

ஹோண்டா CB300F டீலக்ஸ் வேரியண்ட் ரூ. 2 லட்சத்து 26 ஆயிரம்

ஹோண்டா CB300F டீலக்ஸ் ப்ரோ வேரியண்ட் ரூ. 2 லட்தத்து 29 ஆயிரம்

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


மற்ற CB300 சீரிஸ் மாடல்களை போன்றே புதிய CB300F மாடலும் ஹோண்டா நிறுவனத்தின் பரீமியம் பிங்விங் விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. ஹோண்டா CB300F மாடலில் 293சிசி, ஆயில் கூல்டு, நான்கு வால்வுகள் கொண்ட SOHC என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த என்ஜின் 23.8 ஹெச்.பி. பவர், 25.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் 17 இன்ச் அலாய் வீல்கள், அப்சைடு-டவுன் போர்க்குகள், 5 ஸ்டெப் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.


பிரேக்கிங்கிற்கு இரண்டு புறங்களிலும் சிங்கில் டிஸ்க், முன்புறத்தில் 276 மில்லிமீட்டர் யூனிட், பின்புறம் 220 மில்லிமீட்டர் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் கூர்மையான டிசைன், லோ-ஸ்லங் ஹெட்லேம்ப் , பாயிண்டெட் டேன்க் எக்ஸ்டென்ஷன்கள், அப்-ஸ்பெவ்ட் டெயில் பகுதி வழங்கப்பட்டு இருக்கிறது.

மேலும் ஃபுல் எல்இடி லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏபிஎஸ், ஹோண்டாவின் செலக்டபில் டார்க் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

Tags:    

Similar News