பைக்

ரூ. 14 லட்சம் விலையில் புது ஹார்லி பைக் அறிமுகம் - என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?

Update: 2022-08-11 08:04 GMT
  • ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் புதிய நைட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.
  • இந்த மாடலில் சக்திவாய்ந்த 975சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி டேவிட்சன் இந்தியா இணைந்து முற்றிலும் புதிய நைட்ஸ்டர் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளன. புதிய ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் மாடல் விலை ரூ. 14 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் நிறுவன மோட்டார்சைக்கிள், பாகங்கள் மற்றும் அக்சஸரீக்களை அதிகாரப்பூர்வமாக வினியோகம் செய்யும் பொறுப்பை ஹீரோ மோட்டோகார்ப் ஏற்று நடத்தி வருகிறது. புதிய ஹார்லி டேவிட்சன் மாடல் முழுமையாக உருவாக்கப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட உள்ளன.


இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாடல் ஒற்றை வேரியண்ட் மற்றும் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.

விலை விவரங்கள்:

ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் விவிட் பிளாக் ரூ. 14 லட்சத்து 99 ஆயிரம்

ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் கன்ஷிப் கிரே ரூ. 15 லட்சத்து 13 ஆயிரம்

ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் ரெட்லைன் ரெட் ரூ. 15 லட்சத்து 13 ஆயிரம்

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.


இந்த மாடலில் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் ரெவல்யுஷன் மேக்ஸ் 975T, 975சிசி, லிக்விட் கூல்டு, வி-ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 89 ஹெச்பி பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. மேலும் 41 மில்லிமீட்டர் ஷோவா முன்புற போர்க்குகள், ட்வின் ரியர் ஸ்ப்ரிங்குகள், இரு டயர்களிலும் சிங்கில் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன.

இத்துடன் மூன்று வித ரைடிங் மோட்கள், ஏபிஎஸ், என்ஜின் பிரேக்கிங் கண்ட்ரோல், டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

Tags:    

Similar News