பைக்

திடீரென பல்சர் மாடல் விற்பனையை நிறுத்திய பஜாஜ்

Published On 2022-08-23 16:15 IST   |   Update On 2022-08-23 16:15:00 IST
  • பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிரபல மோட்டார்சைக்கிள் சீரிசாக பல்சர் விளங்குகிறது.
  • பஜாஜ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் பல்சர் சீரிஸ் கணிசமான பங்குகளை பெற்று இருக்கிறது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் பல்சர் 180 மாடல் விற்பனையை நிறுத்தி விட்டது. இந்த மாடல் பஜாஜ் ஆட்டோ வலைதளத்தில் இருந்தும் நீக்கப்பட்டு விட்டது. திடீரென இந்த மாடல் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பஜாஜ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

பல்சர் சீரிசில் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட மாடல் பல்சர் 180. பிஎஸ் 6 புகை விதிகள் அமலுக்கு வந்த போது, 2019 ஆண்டு வாக்கில் முதல் முறையாக இந்த மாடல் விற்பனை நிறுத்தப்பட்டது. இத்துடன் பல்சர் 180F விற்பனையும் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் பல்சர் 180 மாடல் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது.


பஜாஜ் பல்சர் 180 மாடலில் 178.6சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 17 ஹெச்பி பவர், 14.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. உபகரணங்களை பொருத்தவரை பஜாஜ் பல்சர் 180 மாடலில் ஹாலோஜன் ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லேம்ப், டிஜி-அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் டெலிஸ்கோபிக் போர்க், மோனோஷாக் சஸ்பென்ஷன், பிரேக்கிங்கிற்கு 280 மில்லிமீட்டர் முன்புற டிஸ்க், பின்புறம் 230 மில்லிமீட்டர் டிஸ்க் மற்றும் சிங்கில் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு உள்ளது. 

Tags:    

Similar News