பைக்

அதற்குள் விற்றுத் தீர்ந்த கிளாசிக் 500 - ராயல் என்பீல்டு அசத்தல்!

Published On 2022-12-02 09:48 GMT   |   Update On 2022-12-02 09:48 GMT
  • ராயல் என்பீல்டு நிறுத்தின் லிமிடெட் எடிஷன் ஸ்கேல் மாடல் 2022 ரைடர் மேனியா நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • இது ராயல் என்பீல்டு நிறுவனத்தின் குறைந்த விலை மற்றும் எடை குறைந்த கிளாசிக் 500 மாடல் ஆகும்.

2022 ரைடர் மேனியா நிகழ்வில் ராயல் என்பீல்டு நிறுவனம் தனது குறைந்த விலை கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இதுதவிர ஹண்டர் 350 மாடல் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை பெற்று இருந்தது.

மிக குறைந்த எண்ணிக்கையில் அறிவிக்கப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 500 மாடல் ஒரே வாரத்தில் விற்றுத் தீர்ந்துள்ளது. இந்திய சந்தையில் புதிய கிளாசிக் 500 மாடலின் விலை ரூ. 67 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது கிளாசிக் 500 பைக்கின் 1:3 ஸ்கேல் மாடல் ஆகும். இந்த மாடல் 18 விதமான நிறங்களில் கிடைக்கிறது.

கிளாசிக் 500 மேட்டார்சைக்கிளின் மினியச்சர் மாடல் அதன் அம்சங்கள் மற்றும் ஸ்டைலிங்கில் விசேஷ கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. இதில் ரைடருக்கான இருக்கை, வயர் ஸ்போக் வீல்கள், பீஷூட்டர் எக்சாஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது லிமிடெட் எடிஷன் மாடல் ஆகும்.

இந்த மாடலில் மூவிங் திராடிள் மற்றும் கிளட்ச் யூனிட், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய செயின் மற்றும் மைக்ரோ கீ உள்ளது. தற்போது விற்றுத் தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இந்த மாடல் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டது என்ற விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Tags:    

Similar News