புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கேடிஎம் RC 200
- ஃபேரிங் முழுவதும் பெரிய 'கேடிஎம்' எழுத்துக்களால், 'RC' மற்றும் 'Ready to Race' சின்னங்களுடன் சிறப்பிக்கப்படுகிறது.
- இந்த பைக்கில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
கேடிஎம் இந்தியா சமீபத்தில் இந்திய சந்தையில் விற்கப்படும் மோட்டார்சைக்கிள்களின் வரிசையில் பெரிய மாற்றத்தை செய்து விலையை உயர்த்தியது. இந்த மாற்றத்திற்கு உட்பட்ட மாடல்களில் RC 200 உள்ளது. இது சுமார் ரூ.11,000 உயர்த்தப்பட்டு, அதன் விலை ரூ.2.54 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) உயர்ந்துள்ளது.
இதனுடன், கடுமையான OBD-2B விதிமுறைகளுக்கு இணங்க பைக் அதன் பவர்டிரெயினில் மாற்றங்களைப் பெற்றது. மேலும், இந்த பைக் முன்பை விட அதிக புதிய நிறங்களில் கிடைக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு அதிக ஆப்ஷன்களை வழங்குகிறது.
சமீபத்திய நிற மாற்றம் மெட்டாலிக் கிரே என்று அழைக்கப்படுகிறது. இது ஃபேரிங் மற்றும் டெயில் பிரிவில் ஆரஞ்சு நிறத்துடன் கூடுதலாக இரண்டு சாம்பல் நிற நிழல்களின் குறிப்பிடத்தக்க கலவையைக் கொண்டுள்ளது. இது ஃபேரிங் முழுவதும் பெரிய 'கேடிஎம்' எழுத்துக்களால், 'RC' மற்றும் 'Ready to Race' சின்னங்களுடன் சிறப்பிக்கப்படுகிறது.
மற்றப்படி இந்த பைக்கில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பைக் ஒரு ஸ்பிளிட்-ட்ரெல்லிஸ் டியூப் ஃபிரேமை அடிப்படையாகக் கொண்டது. இது முன்புறத்தில் 43 மில்லிமீட்டர் USD ஃபோர்க்குகள் மற்றும் பின்புற முனையில் 10-ஸ்டெப் சரிசெய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு ரேடியலாக பொருத்தப்பட்ட காலிப்பர்களுடன் 320 மில்லிமீட்டர் டிஸ்க் மற்றும் ஃபுளோட்டிங் காலிபருடன் பின்புற முனையில் 230 மில்லிமீட்டர் டிஸ்க் வழங்கப்படுகிறது.
கேடிஎம் RC 200 பைக்கில் வளைந்த ரேடியேட்டருடன் கூடிய அதே 199.5 cc சிங்கிள்-சிலிண்டர் லிக்விட்-கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது, இது சிறந்த குளிரூட்டலை வழங்குகிறது என்று பிராண்ட் கூறுகிறது. இது 24 hp பவரையும் 19 Nm பீக் டார்க்கையும் வெளியிடும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.