பைக்

அலாய் வீல்களுடன் அறிமுகமான 2023 ராயல் என்பீல்டு 650 சிசி மாடல்கள்

Update: 2023-03-16 09:15 GMT
  • ராயல் என்பீல்டு நிறுவனம் தனது 650சிசி மாடல்களை இந்தியாவில் அப்டேட் செய்து இருக்கிறது.
  • இரு மாடல்களுக்கான முன்பதிவு நாடு முழுக்க துவங்கி நடைபெற்று வருகிறது.

ராயல் என்பீல்டு நிறுவனம் 2023 இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி 650 மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. 2023 மாடல்களில் அலாய் வீல்கள், புதிய நிற ஆப்ஷன்களில் கிடைக்கின்றன.

புதிய அப்டேட்களின் படி 2023 இண்டர்செப்டார் 650 மாடல் பிளாக்டு-அவுட் வேரியண்ட்களில் (பிளாக் ரே மற்றும் பார்சிலோனா புளூ), புதிய கஸ்டம் டூயல் கலர்வே (பிளாக் பியல்), சாலிட் கலர்வே (கலி கிரீன்) போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இவைதவிர இந்த மாடல் மார்க் 2, சன்செட் ஸ்ட்ரிப், கேன்யன் ரெட் நிறங்களில் கிடைக்கிறது.

 

காண்டினெண்டல் ஜிடி 650 மாடல் இரண்டு புதிய பிளாக்டு-அவுட் வெர்ஷன் (ஸ்லிப்ஸ்டிரீம் புளூ மற்றும் அபெக்ஸ் கிரே), மிஸ்டர் கிளீன், டக்ஸ் டீலக்ஸ், பிரிடிஷ் ரேசிங் கிரீன் மற்றும் ராக்கர் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. புதிய பிளாக்டு அவுட் வேரியண்ட்களில் பிளாக்டு-அவுட் என்ஜின் மற்றும் எக்சாஸ்ட் பாகங்களை கொண்டிருக்கிறது.

புதிய நிறங்கள் தவிர, ராயல் என்பீல்டு நிறுவனம் தனது 650சிசி மாடல்களில் அலாய் வீல்களை வழங்கி இருக்கிறது. இத்துடன் டியுப்லெஸ் டயர்கள் இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி 650 பிளாக்டு அவுட் வேரியண்ட்களில் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய மாடலில் அதிக சவுகரியத்தை வழங்கும் இருக்கைகள், புதிய ஸ்விட்ச்கியர், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், முற்றிலும் புதிய எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்படுகிறது.

 

இரு மாடல்களின் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றணும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் 2023 ராயல் என்பீல்டு இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி 650 மாடல்களில் 648சிசி, பேரலல் டுவின், ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 47 ஹெச்பி பவர், 52 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

2023 ராயல் என்பீல்டு இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி 650 மாடல்களின் விலை முறையே ரூ. 3 லட்சத்து 03 ஆயிரம் மற்றும் ரூ. 3 லட்சத்து 19 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News