ஆட்டோ டிப்ஸ்

இத்தனை லட்சங்களா? விற்பனையில் மாஸ் காட்டிய இன்னோவா!

Update: 2022-08-08 11:33 GMT
  • டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா கார் இந்திய சந்தையில் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான எம்பிவி கார் மாடல்களில் ஒன்றாக டொயோட்டா இன்னோவா இருந்து வருகிறது.

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான டொயோட்டா, தனது எம்பிவி மாடல் இன்னோவா விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று வருவதாக தெரிவித்து உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்த மாடலின் விற்பனை சீராக இருந்ததோடு, எம்பிவி பிரிவில் அசைக்க முடியாத மாடலாகவும் விளங்குகிறது.

டொயோட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவு டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் தனது பிரபல எம்பிவி மாடல் விற்பனையில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து உள்ளது. இந்திய சந்தை விற்பனையில் இன்னோவா மாடல் பத்து லட்சம் யூனிட்களை கடந்து இருப்பதாக அறிவித்து டொயோட்டா நிறுவனம் அறிவித்து இருக்கிறது.


சில நாட்களுக்கு முன்பு தான் ஜூலை மாத விற்பனையில் 19 ஆயிரத்து 693 கார்களை விற்பனை செய்ததாக டொயோட்டா நிறுவனம் அறிவித்து இருந்தது. இந்தியாவில் வியாபாரத்தை துவங்கியதில் இருந்து இதுவரை ஒரே மாதத்தில் டொயோட்டா நிறுவனம் இத்தனை யூனிட்களை விற்பனை செய்ததே இல்லை. 2021 ஜூலை மாதத்தில் டொயோட்டா நிறுவனம் 13 ஆயிரத்து 105 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.

அந்த வகையில் கடந்த மாதம் மட்டும் டொயோட்டா நிறுவன வருடாந்திர விற்பனை 50 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது. இதே போன்று ஜூன் 2022 மாத விற்பனையில் டொயோட்டா 16 ஆயிரத்து 500 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. இது 19 சதவீதம் அதிகம் ஆகும்.

Tags:    

Similar News