ஆட்டோ டிப்ஸ்

இணையத்தில் லீக் ஆன டாடா சஃபாரி EV

Update: 2022-06-16 11:31 GMT
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சஃபாரி மாடல் இந்தியாவில் கிடைக்கும் சிறந்த 7 சீட்டர் மாடல்களில் ஒன்று ஆகும்.
  • இந்த மாடல் ஒற்றை பவர்டிரெயின் ஆப்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சஃபாரி 7 சீட்டர் மாடல் இந்திய சந்தையில் கிடைக்கும் சிறந்த எஸ்.யு.வி. மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. எனினும், டாடா சஃபாரி மாடல் ஒற்றை பவர்டிரெயின் ஆப்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மஹிந்திரா XUV700 மாடலுக்கு போட்டியாக விற்பனை செய்யப்படும் நிலையில், டாடா சஃபாரி மாடலுக்கு பவர்டிரெயின் ஆப்ஷ்கள் இல்லாதது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பச்சை நிற நம்பர் பிளேட்கள் கொண்ட டாடா சஃபாரி மாடல் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்திய சந்தையில் பச்சை நிற நம்பர் பிளேட்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. அப்படி எனில் சஃபாரி எலெக்ட்ரிக் மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.


மேலும் பச்சை நிற நம்பர் பிளேட் கொண்ட டாடா சஃபாரி மாடல் சோதனை செய்யப்படும் யூனிட் போன்றும் காட்சியளிக்கவில்லை. பச்சை நிற நம்பர் பிளேட் பெற வாகனம் எலெக்ட்ரிக் வெர்ஷனாக உருவாக்கப்பட்டு இருக்க வேண்டியது அவசியம் ஆகும். இதுதவிர டாடா மோட்டார்ஸ் உலகின் வேறு எந்த நாடுகளிலும் டாடா சஃபாரி எலெக்ட்ரிக் மாடலையும் அறிமுகம் செய்யவில்லை.

அந்த வகையில் வெளியாகி இருக்கும் மாடல் ஆட்டோமொபைல் துறையில் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டு இருக்க வேண்டும், அல்லது மூன்றாம் தரப்பு நிறுவனம் டாடா சஃபாரி மாடலை எலெக்ட்ரிக் வடிவில் மாற்றி இருக்க வேண்டும். அப்படியெனில் இந்த மாடலுக்கான எலெக்ட்ரிக் கிட் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்த யூனிட் முதலீட்டாளர்களுக்காக உருவாக்கப்பட்ட டெமே வாகனமாக இருக்கலாம்.

Photo Courtesy: autojournalindia

Tags:    

Similar News