ஆட்டோ டிப்ஸ்

ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 இந்திய வினியோக விவரம்

Update: 2022-11-24 11:33 GMT
  • ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முற்றிலும் புதிய 650 சீரிஸ் மோட்டார்சைக்கிள் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
  • புதிய சூப்பர் மீடியோர் 650 மாடலின் வெளியீடு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது.

ராயல் என்பீல்டு நிறுவனம் தனது சூப்பர் மீடியோர் 650 மோட்டார்சைக்கிளை 2022 ரைடர் மேனியா நிகழ்வில் காட்சிப்படுத்தி இருந்தது. ரைடர் மேனியாவில் இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. மற்றவர்கள் இந்த மோட்டார்சைக்கிளை அடுத்த மாதத்தில் இருந்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

எனினும், புதிய ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 மாடலின் விலை விவரங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய சூப்பர் மீடியோர் 650 மாடலின் வினியோகம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துவங்கும் என கூறப்படுகிறது. டெலிவரி பற்றிய தகவல்கள் முன்பதிவு செய்யும் போது தெரிவிக்கப்படுகிறது.

சூப்பர் மீடியோர் 650 மாடலில் 649சிசி பேரலல் ட்வின் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் கொண்ட மூன்றாவது மாடலாக சூப்பர் மீடியோர் 650 அறிமுகமாகி இருக்கிறது. இந்த குரூயிசர் மோட்டார்சைக்கிள் இண்டர்செப்டார் மாடலின் மேல் நிலை நிறுத்தப்படுகிறது. அந்த வகையில் இதன் விலையும் சற்று அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

தற்போதைய தகவல்களின் படி சூப்பர் மீடியோர் 650 விலை இந்தியாவில் ரூ. 3 லட்சத்து 30 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் ஏராளமான அக்சஸரீக்களை கொண்டிருக்கிறது. 

Tags:    

Similar News