ஆட்டோ டிப்ஸ்

இணையத்தில் லீக் ஆன ஷாட்கன் 650 ஸ்பை படங்கள் - வெளியீடு எப்போ தெரியுமா?

Update: 2022-06-28 07:50 GMT
  • ராயல் என்பீல்டு நிறுவனம் பல மாதங்களாக ஷாட்கன் 650 மாடலை உருவாக்கி வருகிறது.
  • இந்த மாடல் 650 ட்வின்ஸ் பிளாட்பார்மை சார்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது.

ராயல் என்பீல்டு நிறுவனம் ஷாட்கன் 650 பெயரில் புது மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருகிறது. இந்த மாடல் பலமுறை சர்வதேச சந்தைகளில் சோதனை செய்யப்பட்டு வந்த ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 அவ்வப்போது இந்திய சந்தையிலும் சோதனை செய்யப்பட்டு வந்தன. இதன் ஸ்பை படங்களும் பல முறை வெளியாகி இருக்கின்றன.

இந்த நிலையில், கிட்டத்தட்ட உற்பத்திக்கு தயாரான நிலையில் ஷாட்கன் 650 மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளன. இந்த மாடல் இந்திய சாலைகளில் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகின்றன. ராயல் என்பீல்டு SG650 கான்செப்ட் மாடலை தழுவியே இந்த மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது.


Photo Courtesy: Zigwheels 

மேலும் ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் 650 ட்வின்ஸ் பிளாட்பார்மில் புதுவரவு மாடலாக இணைகிறது. 650சிசி பிரிவில் ராயல் என்பீல்டு நிறுவனம் இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினெண்டல் ஜி.டி. 650 போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

இரு மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ள பிளாட்பார்மில் தான் ஷாட்கன் 650 மாடலும் உருவாக்கப்பட்டு வருகிறது. இதே பிளாட்பார்மில் ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 மாடலும் எதிர்காலத்தில் இணையும் என கூறப்படுகிறது. இது 650சிசி குரூயிசர் பிரிவில் அறிமுகம் செய்யப்படலாம்.

ஸ்பை படங்களின் படி ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 மாடலில் அப்சைடு டவுன் ஃபோர்க், பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர்கள், அலாய் வீல்கள், டியுப்லெஸ் டையர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 மாடலில் 648சிசி, பேரலல் ட்வின் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 47 ஹெச்.பி. பவர், 52 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும்.

Tags:    

Similar News