ஆட்டோ டிப்ஸ்

பார்க் செய்யப்பட்ட டாடா கார் - திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

Published On 2022-11-23 11:31 GMT   |   Update On 2022-11-23 11:31 GMT
  • இந்தியாவில் எலெக்ட்ரிக் வலாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் பலமுறை அரங்கேறி இருக்கின்றன.
  • தற்போது டாடா கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போது தீப்பிடித்து எரிந்துள்ளது.

வாகனம் அதன் ஸ்டாக் கண்டிஷனில் இருக்கும் போது தீப்பிடித்து எரிவது மிகவும் துயரமான சம்பவமாகவே இருக்கும். அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டாடா ஹேரியர் கார் மாடல் தீப்பிடித்து எரிந்துள்ளது. கார் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்க்பப்ட்டு இருந்த போது, தானாக தீப்பிடித்து எரிந்துவிட்டது என கார் உரிமையாளர் தெரிவித்து இருக்கிறார்.

குனல் போகாரா என்ற நபர் கடந்த ஜூலை மாத வாக்கில் டாடா ஹேரியர் டாப் எண்ட் மாடலை வாங்கி இருக்கிறார். கார் வாங்கியதில் இருந்து எந்த விதமான மூன்றாம் தரப்பு அக்சஸரீக்களையும் தனது வாகனத்தில் இவர் பயன்படுத்தவில்லை. எனினும், கார் வாங்கிய சில மாதங்களில் அதன் பேட்டரி முழுக்க சார்ஜ் தீர்ந்து போயிருக்கிறது. இதனால் காரை அவர் அருகாமையில் உள்ள சர்வீஸ் செண்டரில் கொடுத்து, பேட்டரியை மாற்றி இருக்கிறார்.

புதிய பேட்டரி மாற்றிய மூன்றாவது நாளில் மீண்டும் அதே பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. மீண்டும் டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வ சர்வீஸ் செண்டரில் கார் சரிசெய்யப்பட்டது. பின் போகாரா தனது காரை சீராக பயன்படுத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று 15 கிலோமீட்டர்கள் காரில் சென்று வந்த போகாரா நள்ளிரவு 1.30 மணி அளவில் காரை சாலையின் ஓரத்தில் பார்க் செய்தார். பார்க் செய்யப்பட்ட 15 நிமிடங்களில் கார் தீப்பிடித்து எரிந்தது.

அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர் காரில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த முயற்சித்தப்படி, காரின் உரிமையாளருக்கும் தகவல் கொடுத்தார். விரைந்து வந்த கார் உரிமையாளர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து, அவரும் காரில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த முயற்சித்தார். தீயணைப்பு துறை சம்பவ இடத்திற்கு வருவதற்குள் காரில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியது. இதில் கார் முழுக்க தீப்பிடித்து எரிந்து விட்டது.

காரின் பொனெட்டில் தான் முதலில் தீப்பிடிக்க துவங்கியது என பாதுகாப்பு ஊழியர் தெரிவித்து இருக்கிறார். தனது காரில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்று டாடா மோட்டார்ஸ் விளக்கம் தர வேண்டும் என குனல் கோரிக்கை விடுத்துள்ளார்.

Source: Cartoq

Tags:    

Similar News