ஆட்டோ டிப்ஸ்

தொடர் சோதனையில் புதிய ஸ்விப்ட் கார் - வெளியீடு எப்போ தெரியுமா?

Update: 2022-08-10 10:45 GMT
  • மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய ஸ்விப்ட் ஹேச்பேக் கார் சர்வதேச சந்தையில் வெளியிடப்பட இருக்கிறது.
  • புதிய ஸ்விப்ட் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் மாருதி சுசுகி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

அடுத்த தலைமுறை மாருதி சுசுகி ஸ்விப்ட் ஹேச்பேக் மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் மீண்டும் வெளியாகி உள்ளது. புதிய ஸ்விப்ட் கார் தற்போதைய மாடலுடன் சோதனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் 2023 வாக்கில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே நான்காம் தலைமுறை ஸ்விப்ட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.


Photo Courtesy: Twitter | @suzuki_garage

முன்னதாக ஐரோப்பாவில் எடுக்கப்பட்ட 2023 சுசுகி ஸ்விப்ட் மாடல் ஸ்பை படங்கள் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி இருந்தது. தொடர் சோதனைகளை அடுத்து, விரைவில் வெளியிடப்பட இருக்கும் சுசுகி ஸ்விப்ட் ஹேச்பேக் காரின் ரோடு டெஸ்ட் செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. சோதனை செய்யப்படும் ஸ்விப்ட் கார் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.

புதிய தலைமுறை சுசுகி ஸ்விப்ட் கார் புல்டு-பேக் ஹெட்லேம்ப்கள், டெயில் லேம்ப் உடன் இணையும் படியான ஷோல்டர் லைன் காணப்படுகிறது. இதன் பின்புற தோற்றம் முதல் தலைமுறை சுசுகி ஸ்விப்ட் மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. ஒட்டுமொத்த வடிவமைப்பு கிளாம்ஷெல் பொனெட், பெரிய முன்புற கிரில், ஹெட்லேம்ப்-இன் கீழ்புறம் டிஆர்எல்கள், அகலமான ஏர் இன்டேக்குகள், பெரிய அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News