ஆட்டோ டிப்ஸ்

சோதனையில் சிக்கிய டாடா ஹேரியர்

Published On 2022-09-30 10:46 GMT   |   Update On 2022-09-30 10:46 GMT
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய ஹேரியர் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • இந்த கார் அடுத்த ஆண்டு வாக்கில் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2019 ஜனவரி மாத வாக்கில் ஹேரியர் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அறிமுகம் செய்ததில் இருந்து அவ்வப்போது புது அம்சங்கள் மூலம் ஹேரியர் மாடல் அப்டேட் செய்யப்பட்டு வந்தது. இது தவிர இந்த காரின் நிற ஆப்ஷன்கள் அவ்வப்போது மாற்றப்பட்டு வந்தன. அந்த வரிசையில் ஹேரியர் ஜெட் எடிஷன் மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், டாடா ஹேரியர் புது வேரியண்ட் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. டாடா ஹேரியர் பேஸ்லிப்ட் மாடல் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், கார் எப்படி காட்சியளிக்கும் என ஓரளவுக்கு தெரியவந்துள்ளது. அந்த வகையில் பேஸ்லிப்ட் மாடலின் முன்புற கிரில் மாற்றப்பட்டு இருக்கிறது.

இத்துடன் எல்இடி டிஆர்எல்கள் மேம்படுத்தப்பட்டு, புதிய அலாய் வீல் டிசைன் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த காரின் பம்ப்பர் ரிடிசைன் செய்யப்பட்ட கேசிங் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதன் கேபினில் மேம்மபட்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, ரிவைஸ்டு இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

புதிய டாடா ஹேரியர் பேஸ்லிப்ட் மாடலிலும் 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.

Photo Courtesy: Zigwheels

Tags:    

Similar News