ஆட்டோ டிப்ஸ்

வேற லெவல் அப்டேட்ஸ் - இணையத்தில் லீக் ஆன மாருதி ஆல்டோ விவரங்கள்!

Update: 2022-08-05 11:33 GMT
  • மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய ஆல்டோ காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • புதிய ஆல்டோ மாடலின் பல்வேறு விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் லீக் ஆகி வருகின்றன.

மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஆல்டோ கார் மாடலை ஆகஸ்ட் 18 ஆம் தேதி அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், புது ஆல்டோ கார் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் லீக் ஆகி வருகின்றன. முன்னதாக ஆல்டோ மாடலின் நிறம் பற்றிய விவரங்கள் வெளியான நிலையில், தற்போது இண்டீரியர் விவரங்கள் லீக் ஆகி உள்ளது.

அதன்படி புதிய ஆல்டோ காரின் கேபின் ஆல் பிளாக் தீம் மற்றும் ஃபுளோட்டிங் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் யூனிட், இருபுறங்களிலும் செங்குத்தான சில்வர் இன்சர்ட்கள் உள்ளன. இத்துடன் நடுவே ஏசி வெண்ட்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இத்துடன் பவர் விண்டோ பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஆல்டோ காரில் மேனுவல் ஏசி மற்றும் மேனுவல் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ORVMகள் உள்ளன.


Photo Courtesy: Rushlane 

இத்துடன் முற்றிலும் புதிய ஸ்டீரிங் வீல், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது. காரின் வெளிப்புறம் ஹார்டெக்ட் பிளாட்பார்மை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இத்துடன் சற்றே பெரிய முன்புற கிரில், ஹெட்லேம்ப்கள், சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லேம்ப்கள், பெண்டரில் மவுண்ட் செய்யப்பட்ட இண்டிகேட்டர்கள் உள்ளன.

புதிய மாருதி சுசுகி ஆல்டோ கார் Std, LXi, LXi (O), VXi, VXi (O), VXi+, மற்றும் VXi+ (O) வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. 2022 மாருதி சுசுகி ஆல்டோ மாடல் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கும். இந்த என்ஜின் 66 ஹெச்.பி. பவர், 89 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT யூனிட் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News