ஆட்டோ டிப்ஸ்

பத்து லட்சம் கார்களை ரிகால் செய்யும் மெர்சிடிஸ் பென்ஸ்

Published On 2022-06-08 17:06 IST   |   Update On 2022-06-08 17:06:00 IST
  • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் தனது வாகனங்களை ரிகால் செய்ய முடிவு செய்து இருக்கிறது.
  • இதில் மூன்று கார் மாடல்கள் இடம்பெற்று உள்ளன.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2004 முதல் 2015 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மூன்று கார் மாடல்களை உலகம் முழுக்க ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. இவற்றில் 2nd Gen மெர்சிடிஸ் பென்ஸ் ML கிளாஸ் W164, 1St Gen GL கிளாஸ் X164 மற்றும் R கிளாஸ் W251 போன்ற மாடல்களின் 9 லட்சத்து 93 ஆயிரத்து 407 யூனிட்கள் ரிகால் செய்யப்படுகின்றன.


கார்களின் பிரேக்கிங் சிஸ்டத்தில் உள்ள கோளாறு காரணமாக இத்தனை யூனிட்கள் ரிகால் செய்யப்படுவதாக மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்து இருக்கிறது. "பாதிக்கப்பட்ட கார்களின் சில யூனிட்களில், பிரேக் பூஸ்டர் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கும் பகுதியில் துரு ஏற்பட்டு இருக்கலாம் என கண்டுபிடித்து இருக்கிறோம்," என்று மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது.

தற்போது பாதிக்கப்பட்டு இருக்கும் கார் மாடல்கள் இந்திய சந்தையிலும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அவற்றையும் ரிகால் செய்ய மெர்சிடிஸ் பென்ஸ் முடிவு செய்யும் என்றே தெரிகிறது. எனினும், இதுபற்றி மெர்சிடிஸ் பென்ஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

Tags:    

Similar News