ஆட்டோ டிப்ஸ்

இந்தியாவில் கார் மாடல்கள் விலையை அதிரடியாக மாற்றும் மெர்சிடிஸ் பென்ஸ்

Published On 2023-03-10 11:47 GMT   |   Update On 2023-03-10 11:47 GMT
  • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை மாற்றுகிறது.
  • கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் மெர்சிடிஸ் தனது கார்களின் விலையை 5 சதவீதம் வரை உயர்த்தியது.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை 5 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. புதிய விலை உயர்வு ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வர இருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கார்களின் விலையை 5 சதவீதம் வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

யூரோக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது மற்றும் உற்பத்தி செலவீனங்கள் மற்றும் போக்குவரத்து செலவீனங்கள் அதிகரிப்பதை விலை உயர்வுக்கு காரணமாக மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்து இருக்கிறது. முந்தைய விலை உயர்வு உற்பத்தி செலவீனங்கள் அதிகரிப்பதால் அறிவிக்கப்பட்டது என மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்து இருந்தது.

 

புதிய விலை உயர்வின் படி மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் லிமோசின் மற்றும் GLA மாடல்கள் விலை ரூ. 2 லட்சம் வரை அதிகரிக்க இருக்கிறது. சி கிளாஸ், இ கிளாஸ் மற்றும் எஸ் கிளாஸ் மாடல்கள் விலை முறையே ரூ. 2.5 லட்சம், ரூ. 3.5 லட்சம் மற்றும் ரூ. 6 லட்சம் வரை உயர்த்தப்படுகிறது. GLE 300d 4மேடிக், GLE 400d 4மேசிக் மாடல்களின் விலை முறையே ரூ. 2 லட்சம் மற்றும் ரூ. 3 லட்சம் உயர்கிறது. GLS விலை ரூ. 10 லட்சம் வரை உயர்கிறது.

டாப் எண்ட் மாடல்களான மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ்580 விலை ரூ. 12 லட்சமும், EQS 580 விலை ரூ. 4 லட்சம் வரை உயர்கிறது. முன்னதாக மெர்சிடிஸ் AMG E 53 4மேடிக் பிளஸ் கேப்ரியோலெட் மாடல் வெளியீட்டின் போது இந்திய சந்தையில் 2023 முதல் பாதியில் மட்டும் பத்து புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவித்தது.

Tags:    

Similar News