ஆட்டோ டிப்ஸ்

விற்பனையில் அசத்திய மாருதி சுசுகி - முதல் காலாண்டிலேயே இத்தனை யூனிட்களா?

Update: 2022-07-29 11:55 GMT
  • மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்கள் பட்டியலில் வேகன்ஆர் இடம்பெற்று இருக்கிறது.
  • 2023 முதல் காலாண்டில் மட்டும் மாருதி நிறுவனம் மூன்று கார்களை அறிமுகம் செய்துள்ளது.

மாருதி சுசுகி நிறுவனம் 2023 முதல் காலாண்டில் மட்டும் 3 லட்சத்து 98 ஆயிரத்து 494 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. 2022 முதல் காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனம் 3 லட்சத்து 08 ஆயிரத்து 095 யூனிட்களையே விற்பனை செய்திருந்தது. அந்த வகையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் விற்பனை வருடாந்திர அடிப்படையில் 62 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.


2023 முதல் காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனம் 69 ஆயிரத்து 437 யூனிட்களை ஏற்றுமதி செய்து இருக்கிறது. 2022 முதல் காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனம் 45 ஆயிரத்து 519 யூனிட்களையே ஏற்றுமதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. மாருதி சுசுகி நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன விற்பனை 2023 முதல் காலாண்டில் 4 லட்சத்து 67 ஆயிரத்து 931 யூனிட்கள் ஆகும். இது முந்தைய ஆண்டில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 614 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய சந்தையில் XL6, எர்டிகா மற்றும் மாருதி பிரெஸ்ஸா என மூன்று புது வாகனங்களை அறிமுகம் செய்து இருப்பதே விற்பனை அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. எனினும், மாருதி சுசுகி நிறுவனம் தொடர்ந்து சிப்செட் குறைபாடு பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறது. கடந்த காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனம் 51 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.

Tags:    

Similar News