ஆட்டோ டிப்ஸ்

ஜீப் காம்பஸ் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

Update: 2022-08-11 10:50 GMT
  • ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
  • இந்திய சந்தையில் ஐந்து ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் இந்த மாடல் அறிமுகமாகி இருக்கிறது.

ஜீப் காம்பஸ் ஆனிவர்சரி எடிஷன் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 24 லட்சத்து 44 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் களமிறங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் புதிய ஆனிவர்சரி எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் ஜீப் காம்பஸ் ஆனிவர்சரி எடிஷன் மாடலை விற்பனை மையங்கள் அல்லது ஜீப் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள முடியும். ஸ்பெஷல் எடிஷன் மாடல் என்பதால், இந்த காரில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


இந்த காரின் வெளிப்புறம் 18 இன்ச் அளவில் அலாய் வீல்கள், கிரானைட் க்ரிஸ்டல் பினிஷிங், நியூட்ரல் கிரே நிறத்தால் ஆன ORVM, பாடி கலர் ஃபெண்டர் ஃபிளேர்கள், அக்செண்ட் நிற ரூஃப் ரெயில்கள், முன்புற கிரில் ரிங்குகள் நியூட்ரல் கிரே நிறம் கொண்டுள்ளன. இவை அனைத்தும் காரின் தோற்றத்தில் மாற்றங்களாக பிரதிபலிக்கின்றன. இதனால் கார் முன்பை விட அதிக பிரீமியம் தோற்றம் பெற்று இருக்கிறது. இத்துடன் ஐந்தாவது ஆனிவர்சரி பேட்ஜிங்கும் வழங்கப்பட்டு இருக்கிறது.

காரின் உள்புறம் லெதர் இருக்கை, பிளாக் ஹெட்லைனர்களில் டக்ஸ்டன் அக்செண்ட் ஸ்டிட்ச் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர், பியானோ பிளாக் மற்றும் அனோடைஸ்டு கன் மெட்டல் இண்டீரியர் அக்செண்ட்கள் செய்யப்பட்டுள்ளன.

ஜீப் காம்பஸ் ஆனிவர்சரி எடிஷன் மாடல் 162 ஹெச்பி பவர் கொண்ட 1.4 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட மல்டி-ஏர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 170 ஹெச்பி பவர், 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட மல்டிஜெட் டீசல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த ஸ்பெஷல் காரை 4x4 வெர்ஷனிலும் பெற முடியும். எனினும், இந்த வசதி டீசல் என்ஜினில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.

கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை பொருத்தவரை பெட்ரோல் என்ஜினுக்கு 7 ஸ்பீடு DCT, டீசல் என்ஜினுக்கு 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 9 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News