ஆட்டோ டிப்ஸ்

கார்களில் எலி வராமல் இருக்க இதை மட்டும் செய்தால் போதும்!

Published On 2023-06-05 08:05 GMT   |   Update On 2023-06-05 08:05 GMT
  • காரை சுத்தமாகவும், எந்த விதமான துர்நாற்றமும் இன்றி பராமரித்தால் எலிகளின் தொல்லை இருக்காது.
  • என்ஜின் பகுதி எலிகள் தங்குவதற்கு ஏற்ற இடமாக இருக்கிறது.

கார்களை பராமரித்தல் மிகவும் நேர்த்தியான வேலை. ஒவ்வொரு பருவநிலைக்கு ஏற்ப கார்களில் இதை செய்ய வேண்டும், இதை செய்யக் கூடாது என ஏராளமான நுனுக்கங்கள் இதில் உள்ளன. மழை காலங்களில் கார்களுக்குள் எலி புகுந்து கொண்டு அட்டகாசம் செய்வது அதிகரிக்கும். பருவமழை பெய்யும் சீசனும் விரைவில் துவங்க இருப்பதாலும், எப்போதும் கார்களில் எலி தொல்லை ஏற்படாமல் இருக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

கார்களில் உணவு பண்டங்களை வைக்க வேண்டாம்:

எலி மற்றும் இதர பூச்சிகள் உணவு பொருட்களை கண்டே கார்களுக்குள் ஈர்க்கப்படலாம். அதனால் கார்களினுள் உணவு பொருட்கள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். கார் இண்டீரியரில் உணவு பொருட்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வது சிறந்தது. காரை சுத்தமாகவும், எந்த விதமான துர்நாற்றமும் இன்றி பராமரித்தாலே எலிகளின் தொல்லை இருக்காது.

இருள்சூழ்ந்த பகுதியில் நிறுத்த வேண்டாம்:

எலிகள் பெரும்பாலும் இருள் சூழ்ந்த பகுதிகளிலேயே தங்க விரும்பும். இதன் காரணமாகவே என்ஜின் பகுதி எலிகள் தங்குவதற்கு ஏற்ற இடமாக இருக்கிறது. கார்களை எப்போதும் சுத்தமான மற்றும் அதிக வெளிச்சமுள்ள பகுதிகளில் நிறுத்தி வைப்பது நல்லது.

தெளிப்பான்கள்:

கார்களில் எலி மற்றும் பூச்சிக்கள் வராமல் இருக்க செய்வதற்காக சந்தையில் ஏராளமான தெளிப்பான்கள் (Spray) கிடைக்கின்றன. இவற்றை பயன்படுத்தினாலும், கார்களில் எலி வருவதை தடுக்க முடியும். இவற்றை நேரடியாகவோ அல்லது ஆன்லைனிலும் வாங்கிக் கொள்ளலாம்.

செல்லப்பிராணிகள்:

வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்போர் பெரும்பாலும், எலி மற்றும் இதர பூச்சுகளால் எவ்வித இடையூறும் சந்தித்து இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. பூனை மற்றும் நாய்களை வீடுகளில் வளர்க்கும் போது, எலி மற்றும் இதர பூச்சிகள் வீட்டிற்குள் வர நினைக்காது. செல்லப்பிராணி வைத்திருக்கும் கார் ஓனர்களுக்கு இது சிறந்த வழிமுறை ஆகும்.  

Tags:    

Similar News