ஆட்டோ டிப்ஸ்

திடீரென கார் மாடல்கள் விலையை உயர்த்திய ஹோண்டா

Update: 2022-08-02 11:18 GMT
  • ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் சிட்டி ஹைப்ரிட் மாடல் விலையை முதல் முறையாக உயர்த்தி இருக்கிறது.
  • இது மட்டுமின்றி மேலும் சில மாடல்கள் விலையும் மாற்றப்பட்டு உள்ளது.

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு ஆகஸ்ட் மாதத்தில் அமலுக்கு வந்தது. முற்றிலும் புதிய சிட்டி, சிட்டி eHEV, ஜாஸ் மற்றும் WR-V போன்ற மாடல்களின் விலை மட்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா சிட்டி eHEV மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 39 ஆயிரத்து 100 விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது சிட்டி eHEV ZX வேரியண்டிற்கு மட்டும் பொருந்தும்.


இதைத் தொடர்ந்து ஜாஸ் மற்றும் ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி மாடல்களுக்கு ரூ. 11 ஆயிரம் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இது அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.

ஹோண்டா WR-V டீசல் வேரியண்ட்களுக்கும் ரூ. 11 ஆயிரம் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் பெட்ரோல் வேரியண்ட்களுக்கு விலை உயர்வு அறிவிக்கப்படவில்லை.

ஹோண்டா அமேஸ் E MT வேரியண்ட் விலை மட்டும் உயர்த்தப்படவில்லை. மற்ற அனைத்து வேரியண்ட்களின் விலையும் ரூ. 6 ஆயிரத்து 300-இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 11 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News