ஆட்டோ டிப்ஸ்

எலெக்ட்ரிக் வாகன வினியோகத்தில் புது மைல்கல் எட்டிய ஆடி!

Published On 2023-01-14 11:38 GMT   |   Update On 2023-01-14 11:38 GMT
  • ஆடி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.
  • 2021 ஆண்டை விட கடந்த ஆண்டு 44 சதவீதம் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை ஆடி வினியோகம் செய்து இருக்கிறது.

ஆடி நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் 1.61 மில்லியன் வாகனங்களை வினியோகம் செய்து இருக்கிறது. 2021 ஆண்டு ஐரோப்பா, ஜெர்மனி மற்றும் இதர முக்கிய சந்தைகளில் விற்றதை விட அதிக வாகனங்களை கடந்த ஆண்டு வினியோகம் செய்து இருக்கிறது. ஆடி நிறுவனத்தின் ஆல் எலெக்ட்ரிக் மாடல்கள்- ஆடி Q4 இ டிரான், ஆடி இ டிரான் GT குவாட்ரோ1 மற்றும் ஆடி இ டிரான் உள்ளிட்டவற்றுக்கு அதிக வரவேற்பு கிடைத்தன.

எலெக்ட்ரிக் பிரிவில் ஆடி Q8 இ டிரான மாடல் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த மாடல் 2023 மார்ச் முதல் ஜூன் மாதத்திற்குள் விற்பனைக்கு வர இருக்கிறது. அதற்குள் இந்த மாடலை வாங்க பெரும்பாலானோர் முன்பதிவு செய்துள்ளனர். 2026 ஆண்டில் இருந்து ஆடி நிறுவனம் சர்வதேச சந்தையில் எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஆடி நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 18 ஆயிரத்து 196 எலெக்ட்ரிக் வாகனங்களை கடந்த ஆண்டு வினியோகம் செய்து இருக்கிறது. இது 2021 ஆண்டுடன் ஒப்பிடும் போது 44.3 சதவீதம் அதிகம் ஆகும். இதில் ஆடி A3 (+12.1 சதவீதம்), ஆடி A4 (+8.0 சதவீதம்) மற்றும் ஆடி Q5 (+2.7 சதவீதம்) வளர்ச்சியை பெற்றுள்ளன.

"எலெக்ட்ரிக் மொபிலிட்டி சரியான பாதையில் இருப்பதை உணர்த்தும் வகையில் எங்களின் ஆல் எலெக்ட்ரிக் மாடல்கள் அமோக விற்பனையை பதிவு செய்கின்றன. போட்டி மற்றும் புதுமைகள் நிறைந்த சூழலில், எங்களின் சர்வதேச குழு கடந்த ஆண்டு மேலும் ஒரு முறை கடினங்களை எதிர்கொண்டுவிட்டது."

"குழுவினரின் விடா முயற்சி, தலைசிறந்த நிர்வாக திறன் மற்றும் சீரான விற்பனை இலக்கு உள்ளிட்டவைகளுக்கு நன்றி. இதன் காரணமாக கடந்த ஆண்டு வியாபாரத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடிந்தது," என ஆடி நிறுவனத்தின் நிர்வாக குழு உறுப்பினர் ஹில்டிகார்ட் வொர்ட்மேன் தெரிவித்து இருக்கிறார். 

Tags:    

Similar News