ஆட்டோ டிப்ஸ்

இரண்டு புது நிறங்களில் கிடைக்கும் ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின்

Update: 2022-08-03 11:31 GMT
  • ஹோண்டா நிறுவனத்தின் அட்வென்ச்சர் ஸ்போர்ட் மாடல் இரண்டு புதிய நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
  • புது நிறம் தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

ஹோண்டா நிறுவனம் 2023 ஆப்ரிக்கா ட்வின் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிளாக்‌ஷிப் அட்வென்ச்சர் டூரிங் மோட்டார்சைக்கிள் ஸ்டாண்டர்டு மற்றும் அட்வென்ச்சர் ஸ்போர்ட் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இரண்டு வேரியண்ட்களும் தற்போது இறண்டு புது நிறங்களில் கிடைக்கிறது.

2023 ஸ்டாண்டர்டு CRF1100L ஆப்ரிக்கா ட்வின் மாடல் மேட் பலிஸ்டிக் பிளாக் மெட்டாலிக் மற்றும் க்ளிண்ட் புளூ மெட்டாலிக் டிரைகலர் நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் 2022 மாடல்களை போன்றே புது மாடல்களும் கிராண்ட் ப்ரிக்ஸ் ரெட் நிறத்திலும் கிடைக்கிறது.


மேட் பலிஸ்டிக் பிளாக் மெட்டாலிக் மாடல் ஆல்-பிளாக் பிரேம், க்ளிண்ட் வேவ் புளூ மெட்டாலிக் டிரைகலர் மாடல் புளூ நிற ஹெட்லைட் கௌல், புளூ முன்புற பெண்டர், டெயில் பகுதிகளில் ரெட் மற்றும் வைட் நிற டிடெயிலிங் செய்யப்பட்டு உள்ளது. அட்வென்ச்சர் ஸ்போர்ட் மாடல் மேட் இரிடியம் கிரே மெட்டாலிக் நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் பியல் கிளேர் வைட் டிரைகலர் நிறத்திலும் கிடைக்கிறது.

சர்வதேச சந்தையில் இரு மாடல்களும் மேனுவல் அல்லது டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் டிசைன் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. 2023 CRF1100L ஆப்ரிக்கா ட்வின் மாடல்களில் ட்வின் பாட் ஹெட்லைட், உயரமான விண்ட்ஸ்கிரீன், செமி ஃபேரிங், டால் செட் எக்சாஸ்ட் மற்றும் என்ஜின் பாஷ் பிளேட் உள்ளது. அட்வென்ச்சர் ஸ்போர்ட் மாடல் பெரிய பியூவல் டேன்க் கொண்டுள்ளது.

Tags:    

Similar News