ஆட்டோ டிப்ஸ்
விமான நிலையம்

பறக்கும் கார், டிரோன்களுக்காக பிரத்யேக விமான நிலையம்

Published On 2022-05-26 11:31 GMT   |   Update On 2022-06-06 09:52 GMT
பறக்கும் கார் மாடல்களுக்கான பிரத்யேக விமான நிலையம் உலகில் முதல் முறையாக திறக்கப்பட்டு இருக்கிறது.

பறக்கும் கார் மாடல்கள் இன்றும் சுவாரஸ்ய கனவாகவே இருந்து வருகிறது. விரைவில் பறக்கும் கார்கள் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பறக்கும் கார் மற்றும் டிரோன்கள் தரையிறங்கி, டேக் ஆஃப் ஆக உலகின் முதல் விமான நிலையம் லண்டனில் திறக்கப்பட்டு உள்ளது. 



லண்டனை சேர்ந்த அர்பன் ஏர் போர்ட் லிமிடெட் நிறுவனம் இந்த விமான நிலையத்தை பறக்கும் திறந்துள்ளது. இந்த விமான நிலையம் ஏர் ஒன் என அழைக்கப்படுகிறது. விமான நிலையத்தின் ஒட்டு மொத்த பணிகள் அடுத்த 15 மாதங்களில் முழுமையாக நிறைவு பெற்று விடும். இந்த விமான நிலையம், லண்டனில் இருந்து 155 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்து உள்ளது.  

ஏர் ஒன் விமான நிலையத்தில் இருந்து காற்று மாசு ஏற்படுத்தாத பறக்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள், ஏர் டாக்சிக்கள் மற்றும் டிரோன்கள் டேக் ஆஃப் செய்து, தரையிறங்க முடியும். பறக்கும் கார் மற்றும் டிரோன்களுக்கான விமான நிலையம், எப்போது வேண்டுமானாலும் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News