கன்னி - வார பலன்கள்

இந்த வார ராசிப்பலன்

Published On 2023-07-31 16:07 IST   |   Update On 2023-07-31 16:07:00 IST

31.7.2023 முதல் 6.8.2023 வரை

சுபவிரயம் உண்டாகும் வாரம். விரய ஸ்தானத்தில் சனி பார்வையில் மூன்று கிரகச் சேர்க்கை. நான்காம் அதிபதி குரு தன் வீட்டைத் தானே பார்ப்பதால் பலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்கும் பாக்கியம் உண்டாகும். வலது பக்கத்து வீட்டுக்காரருடன் நிலவிய எல்லைத் தகராறு சுமூகமாகும். தடைபட்ட வீடுகட்டும் பணி துரிதமாகும். தாயின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தாய்வழிச் சொத்திற்காக தாய் மாமாவுடன் ஏற்பட்ட வழக்கின் தீர்ப்பு சாதகமாகும். பலருக்கு திருமணத் தடை அகலும். சிலர் பெற்றோரின் அனுமதியின்றி திருமணம் செய்வார்கள். சிலருக்கு இரண்டாம் திருமணம் நடக்கும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். மூத்த சகோதரத்தால் ஆதாயம் உண்டாகும். பெண் நண்பிகளிடம் விலை உயர்ந்த நகைகளை இரவல் கொடுப்பது வாங்குவதை தவிர்க்கவும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். உபரி வருமானத்தை அரசுடைமை வங்கிகளில் சேமிக்க வேண்டும்.

ஆடம்பரச் செலவையும் கடன் வாங்குவதையும் தவிர்த்தால் இந்த வாரம் அனைத்து நாட்களும் இன்பமாகவே இருக்கும். ஆடிப் பெருக்கு அன்று நீர் நிலைகளுக்கு சென்று நீராடவும்.

பிரசன்ன ஜோதிடர்

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News