search icon
என் மலர்tooltip icon

  கன்னி - வார பலன்கள்

  கன்னி

  இந்தவார ராசிபலன்

  19.2.2024 முதல் 25.2.2024 வரை

  எதிரிகளை வெல்லும் வாரம். ராசி அதிபதி புதன் விரய அதிபதி சூரியன் மற்றும் 5, 6-ம் அதிபதி சனியுடன் ராசிக்கு 6-ல் சஞ்சாரம் செய்கிறார். மனிதர்கள் எப்பொழுதும் வெற்றியை கரம் பிடிக்க நேரம் காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும். இப்பொழுது கன்னி ராசிக்கு அஷ்டமாதிபதி செவ்வாய் உச்சம். 6-ம் அதிபதி சனி ஆட்சி. மறைவு ஸ்தானங்கள் பலம் பெறுவதால் எதிரிகள் உங்களை கண்டு ஒதுங்குவார்கள். உங்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்தவர்களின் சூழ்ச்சிகள் தவிடு பொடியாகும். செய்வினை, கண் திருஷ்டி, இனம் புரியாத பயம் போன்ற பாதிப்புகள் விலகும். அதிக கடன் தொல்லை இருப்பவர்களுக்கு விபரீத ராஜ யோகத்தால் கடன் தொல்லை குறையும் அல்லது தள்ளுபடியாகும்.

  உடன் பிறந்தவர்கள் மற்றும் தந்தையால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கடந்த காலங்களில் நிலவிய நெருக்கடிகள் குறைந்து படிப்படியாக முன்னேற்றம் உண்டாகும். தம்பதிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் சிறு குறைபாடு தோன்றும். பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் இணக்கமான சூழ்நிலை நிலவும். மாசி மகத்தன்று சிவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபடவும்.

  `பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  கன்னி

  இந்தவார ராசிபலன்

  12.2.2024 முதல் 18.2.2024 வரை

  கலக்கலான வாரம். ராசி அதிபதி புதன் 3, 10ம் அதிபதி சுக்ரன் மற்றும் அஷ்டமாதிபதி செவ்வா யுடன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சேர்க்கை. புத்திசாலித்தனமாக செயல்பட்டு, திட்டமிட்டு லாபம் சம்பாதிப்பீர்கள். தொழிலில் சிறு தடைகள் இருந்தாலும் கடுமையாக உழைத்து வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு விபரீத ராஜயோகதால் இன்சூரன்ஸ் பாலிசி முதிர்வு தொகை, அதிர்ஷ்டப் பணம் கிடைக்கும். வெளியூர், வெளி நாட்டில் வசிக்கும் சகோதர, சகோதரிகள் ஒன்று கூடி ஆனந்தம் அடையும் சந்தர்ப்பம் உண்டாகும். தம்பதிகளுக்குள் நிலவிய ஈகோ பிரச்சி னை சுமூகமாகும். தொழில், உத்தியோக நிமித்தமாக சிலர் வெளியூரில் வசிக்க நேரும்.

  சிலருக்கு மறுமணம் நடக்கும். அஷ்டமாதிபதி செவ்வாய் உச்சம் பெறுவதால் ஆரோக்கியம், பணம் கொடுக்கல் வாங்கல், வம்பு, வழக்கு, ஜாமீன் போன்றவற்றில் விழிப்புடன் செயல்படுவது நல்லது. விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆவ ணங்களை கவனமாக கையாளவும். அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வத்தை குறைப்பது நல்லது. 14.2 2024 அன்று காலை 10.43 மணி முதல் 16.2.2024 மதியம் 2.43 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சக பணியாளர்களிடம் அனுசரித்து செல்லவும்.தேவையற்ற வெளியூர் பயணங்களை ஒத்தி வைக்கவும். தினமும் திருக்கோளாற்று பதிகம் படிக்கவும்.

  `பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  கன்னி

  இந்தவார ராசிபலன்

  5.2.2024 முதல் 11.2.2024 வரை

  சுமாரான வாரம். ராசி அதிபதி புதன் விரய அதிபதி சூரியனுடன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெற்ற அஷ்டமாதிபதி செவ்வாயுடன் சேர்க்கை.பூர்வீக சொத்து தகராறு மன வருத்தத்தை அதிகரிக்கும்.தேவையில்லாத வம்பு, வழக்குகளை தவிர்க்கவும். எந்த காரியத்திற்கும் பல முறை முயற்சி செய்ய வேண்டும். தொழில் சீராக நடந்தாலும் லாபம் நிற்காது. கூட்டம் களைகட்டும் கல்லாகளை கட்டாது. நம்பிய வேலையாட்களால் சில அசவுகரியங்கள் உண்டாகும். தொழில் சார்ந்த அரசின் சட்ட திட்டங்களை விதிகளை கடைபிடிப்பது அவசியம். அலைச்சல் மிகுந்த பயணம் உண்டாகும்.

  கொடுக்கல் வாங்கலில் நிதானத்தை கடைபிடிக்கவும். திருமண முயற்சி தடைபடும். சுபச் செலவிற்காக கடன் பெற நேரலாம். மாமனாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சீராகும். உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் செல்லுவது அவசியம். வாழ்க்கை துணைக்கு வட்டியில்லா கடன் கிடைக்கும். சிலருக்கு அரசு உத்தியோக வாய்ப்பு தேடி வரும். ஆரோக்கியத்தை பேணி காப்பது அவசியம். தை அமாவாசையன்று பள்ளி மாணவர்களின் தேவையறிந்து உதவவும்.

  `பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  கன்னி

  இந்தவார ராசிபலன்

  29.1.2024 முதல் 4.2.2024 வரை

  தடைகள் விலகும் வாரம். ராசிக்கு 5-ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் நிற்பதால் இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.வழக்கு விவகாரம் சாதகமாகும். அரசு உத்தியோக முயற்சி வெற்றி தரும்.சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். முயற்சிக்கு உண்டான லாபம் கிடைக்கும். புதிய தொழில் சார்ந்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் இருந்துவந்த சங்கடங்கள் விலகும். வாழ்க்கைத் துணை வழியில் நல்ல செய்தி வரும்.குழந்தைகளால் மனநிம்மதி, மதிப்பு மேம்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். வராக்கடன்கள் வசூலாகும். பண வரவில் நிலவிய தடை தாமதங்கள் விலகும்.

  அலுவலகப் பிரச்சினைகள் முடிவிற்கு வரும்.ராகு,கேதுக்களால் ஏற்படும் இன்னல்களை சமாளிக்க முடியும். புதிய வாகன யோகம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புதியவர்கள் நட்பு ஆதாயத்தை தரும். நீண்டதூர ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். வியாழக்கிழமை ஸ்ரீ சாய் பாபாவை வழிபட நன்மைகள் அதிகமாகும்.

  `பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  கன்னி

  இந்தவார ராசிபலன்

  22.1.2024 முதல் 28.1.2024 வரை

  சாதாரணமான வாரம். ராசி அதிபதி புதன் அஷ்டமாதிபதி செவ்வாயுடன் ராசிக்கு 4-ல் இணைவதால் சொத்து தொடர்பான வழக்குகள் இழுபறியாகும். சிலருக்கு வருமான வரி, சொத்து வரி போன்றவற்றால் மன சஞ்சலம் ஏற்படும். அவசியமற்ற கடனைத் தவிர்க்கவும். தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். புகழ் கொடி கட்டி பறக்கும். பல மொழிப் படங்களில் வாய்ப்புகள் தேடிவரும். கடல் கடந்து சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்புள்ளது. கலைத்துறையினருக்கு இது சிறப்பான எதிர்காலம் தந்தை, மகன் பிரிவினை, மனக்கசப்பு விலகும்.

  தந்தைக்கு சட்ட நெருக்கடி எற்படலாம். குழந்தைகளுக்கு நரம்பு தொடர்பான சிறு பாதிப்பு இருக்கும். சிலர் மதம் மாறலாம் அல்லது கலப்பு திருமணம் செய்யலாம். தைரியமும் தெம்பும் குடிபுகும். மாற்றுமுறை வைத்தியத்தால் ஆரோக்கிய குறைபாடு அகலும். சிலருக்கு தீய வழியில் பொருள் விரயம் ஏற்படலாம். நன்மையும் தீமையும் கலந்த வாரமாகவே இருக்கும் என்பதால் ஒரு செயலில் இறங்கும் முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். தைப்பூசத்தன்று பித்ருக்களை வழிபடவும்.

  `பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  கன்னி

  இந்தவார ராசிபலன்

  15.1.2024 முதல் 21.1.2024 வரை

  சுப விரயம் மிகுதியாகும் வாரம் . விரய ஸ்தான அதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருள் வரவு மிகுதியாகும். காசு, பணம், துட்டு, மணி பல வழிகளில் வாசல் கதவைத் தட்டும். திருமணம், பிள்ளைகளின் கல்விச் செலவு, வீடு, வாகனச் செலவு என சுப விரயங்கள் மிகுதியாகும். பிள்ளைகள் உத்தியோகத்திற்காக வெளியூர், வெளிநாடு செல்வார்கள். 4-ல் நிற்கும் செவ்வாய் 7-ம்மிடம் பார்ப்பதால் திருமணம் கைகூடும. வரன் மிக அருகாமையிலேயே அமையும் எதிர்கால முன்னேற்றத்திற்காக சிலர் இடம் பெயர நேரும். சிலரின் தாயார் மூலம் தம்பதிகளுக்குள் சண்டை வரும். தொழில் முன்னேற்றத்திற்காக வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கக் கூடும். சிலர் வீட்டை பழுது நீக்கம் செய்யலாம். சிலருக்கு கதை, கவிதை எழுதும் ஆர்வம் ஏற்படும்.

  பெண்கள் எந்த காரியத்தையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். 18.1.2024 அன்று காலை 3.33 மணி முதல் 20.1.2024 அன்று காலை 8.52 மணி வரை சந்திராஷ்டம் இருப்பதால் ஞாபக மறதி உண்டாகும். அலைச்சல் அதிகமாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஸ்ரீ ராமரை பட்டாபிசேக கோலத்தில் வழிபடவும்.

  `பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  கன்னி

  இந்தவார ராசிபலன்

  8.1.2024 முதல் 14.1.2024 வரை

  சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் அஷ்டமாதிபதி செவ்வாய் மற்றும் விரய அதிபதி சூரியனுடன் சேர்ந்து நிற்பதால் சில அசவுகரியங்களை ஏற்படுத்தும்.உங்களுக்கு நீங்களே எதிரியாகும் சூழ்நிலை ஏற்படும். அடுத்தவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகளால் விரோதம் உண்டாகும். இழப்புகள் உண்டாகும். அதை ஈடுகட்டும் படியான லாபமும் வரும். கூட்டுக் குடும்பம், கூட்டுத்தொழிலால் சில மனக்கசப்புகள் ஏற்படலாம். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இழுபறியாக இருக்கும். பிள்ளைகளின் திருமண முயற்சி கைகூடும். ராசியில் கேது இருப்பதால் பிறர் விசயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். உங்கள் பணியில் மட்டும் கவனமாக இருக்கவும்.

  ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு குழப்பம் இருக்கும். வெளி நாட்டில் வசிப்பவர்களுக்கு. பூர்வீகம் வந்து செல்வதில் தடை, தாமதம் உண்டாகும்.வேலையாட்களால் ஏற்பட்ட தொந்தரவு நீங்கும். லஞ்சம் கொடுத்து அரசு வேலைக்கு முயற்சிப்பதை தவிர்க்கவும். சக்திக்கு மீறிய செயல்களில் ஈடுபட வேண்டாம். பிரதோஷத்தன்று நந்தி வழிபாடு சிறப்பு.

  `பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  கன்னி

  இந்தவார ராசிபலன்

  1.1.2024 முதல் 7.1.2024 வரை

  சுப விரயங்கள் மிகுதியாகும் வாரம். விரய அதிபதி சூரியன் சுக ஸ்தானத்தில் குருவின் பார்வையில் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும்.உங்கள் தேவைகள் விருப்பங்கள், எண்ணங்கள் நிறைவேறும். திட்டமிட்டு செயல்படும் முயற்சிகள் வெற்றி தரும். தந்தை, மகள் ஒற்றுமை பலப்படும். குடும்ப விவகாரங்களில் தலையிட்டவர்கள் தாமாக விலகுவார்கள். வேலையில் உள்ளவர்களுக்கு திடீரென பொறுப்புகள் மாற்றப்பட்டு மன உளைச்சல் ஏற்படலாம். வேலைப்பளு மிகுதியாக இருக்கும்.

  தொழிலில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் கணிசமான பணப் புழக்கம் கைகளில் புரளும், திருமண முயற்சி வெற்றி தரும். சுய விருப்ப விவாகத்திற்கு வீட்டுப் பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது.இழந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். திருமணம், காது குத்து, ஆடம்பர பொருள் சேர்க்கை போன்றவற்றால் சுப விரயங்கள் கூடும். முதல் வாழ்க்கையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும். பிரதோஷத்தன்று நரசிம்மரை வழிபடவும்.

  `பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  கன்னி

  இந்தவார ராசிபலன்

  25.12.2023 முதல் 31.12.2023 வரை

  ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய காலம். ராசி அதிபதி புதன் வக்ரம் பெறுதல். விரய அதிபதி சூரியன் சுக ஸ்தானத்தில் 3,8-ம் அதிபதி செவ்வாயுடன் சேர்க்கை என முக்கிய கிரகங்களின் சஞ்சாரம் சாதகமற்று இருப்பதால் சிலருக்கு முன்னோர்கள் வழி நோக்கம் உருவாகலாம். சிறிய உடல் உபாதை இருந்தாலும் உரிய வைத்தியம் செய்ய வேண்டும். ராசியில் கேது, 7-ல் ராகு இருப்பதால் கூட்டுத் தொழிலில், நண்பர்களிடம் கருத்து வேறுபாடு உருவாகும். புதிய வேற்று இன நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் கிடைக்கலாம். வேலை மாற்றம் செய்பவர்கள் அப்பாயின்மென்ட ஆர்டர் வாங்கிய பிறகு பழைய வேலையை விட வேண்டும். சிலருக்கு பிறரின் பணியை சேர்த்து செய்ய வேண்டிய சூழல் நிலவும். சிலர் தொழில் உத்தியோ கத்திற்கு இடம் பெயரலாம்.

  குடும்பத்தில் சம்பந்தமில்லாத நபர்கள் குறுக்கீட்டால் மன சஞ்சலம் அதிகரி க்கும். விருப்ப விவாகம் நடக்கலாம்.திருமணம், குழந்தை பாக்கிய முயற்சியில் தடைகள் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்வதில் நிலவிய தடைகள் அகலும். ஆஞ்சநேயரை வழிபடலாம்.

  `பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  கன்னி

  இந்தவார ராசிபலன்

  18.12.2023 முதல் 24.12.2023 வரை

  புதிய முயற்சிகள் நன்மை தரும். 2, 9-ம் அதிபதி சுக்ரன் ஆட்சி பலன் பெறுவதால், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் துறை, ஊடகங்கள், குலத்தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பலன்கள் இரட்டிப்பாகும். நீண்டநாள் பிரச்சினைகள் முடிவிற்கு வரும். புதிய முயற்சிகள் வெற்றியடையும்.பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் நிம்மதி தரும்.பேசி நிச்சயித்த திருமணத்திற்கு முகூர்த்தம் குறிக்கப்படும்.சில மாணவர்கள் உயர் கல்விக்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம்.

  பூர்வீகச் சொத்தால் சகோதர சகோதரிகளுடன் மனக்குழப்பம் அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி, ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.7-ல் ராகு இருப்பதால் சில தம்பதிகள் தொழில் அல்லது வேலை நிமித்தமாக குறுகிய காலம் பிரிந்து வாழலாம். 21.12.2023 இரவு 10.08 முதல் 24.12.2023 அதிகாலை 3.17 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வீண் செலவால் மன சஞ்சலம் மனக்குழப்பம் உருவாகும். ஏகாதசியன்று விஷ்ணு சகஸ்ர நாமம் கேட்கவும்.

  `பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  கன்னி

  இந்தவார ராசிபலன்

  11.12.2023 முதல் 17.12.2023 வரை

  பாக்கிய பலன்கள் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி புதன் சுக ஸ்தானத்தில் வக்ரம் பெறுகிறார். ஆனால் 2,9-ம் அதிபதி சுக்ரன் ஆட்சிபலம் பெறுவதால் பாக்கியஸ்தானம் வலிமை பெறுகிறது. சொல்வாக்கு உயரும். நன்மைகள் அதிகரிக்கும். தந்தையின் ஆசிர்வாதம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். துணிவுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். சிறிய முதலீட்டில் அதிக லாபம் பார்ப்பீர்கள். அரசு, வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் வெற்றி உறுதி. வருமானத்தடை விலகும். குழந்தை பாக்கியம் ஏற்படும். செயற்கை கருத்தரிப்பை நாடியவர்களுக்கு இயற்கையாகவே குழந்தை பிறக்கும். 3-ல் அஷ்டமாதிபதி செவ்வாய் பலம் பெறுவதால் கூட்டு குடும்பமாக இருக்கும் அண்ணன், தம்பிகள் அனுசரித்து செல்லுதல் நலம். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தென்படும்.

  எதிர் பாலினத்தவரால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும்.குல தெய்வ வழிபாடு பலன் தரும். ராசியில் கேது 7-ல் ராகு இருப்பதால் சர்ப்ப வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். பாக்கிய ஸ்தானம் பலம் பெறுவதால் அமாவாசையன்று முன்னோர்களுக்கு முறையான திதி, தர்பணம் கொடுப்பது நல்லது.

  `பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  கன்னி

  இந்தவார ராசிபலன்

  4.12.2023 முதல் 10.12.2023 வரை

  சிந்தித்து செயல்பட வேண்டிய காலம். 2, 9-ம் அதிபதி சுக்ரன் ஆட்சி பலம் பெறுவது கன்னி ராசிக்கு மிகுந்த நன்மை தரும் கிரக அமைப்பாகும். மனதும் உடலும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கும். பணம் சம்பாதிக்கும் சிந்தனையுடனே இருப்பீர்கள். கடந்த கால கடன்களைத் தீர்த்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வந்து சேரும். வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் இழுத்தடித்த வர்கள் வீடு தேடி வந்து பணத்தை கொடுப்பார்கள். லக்னத்தில் நிற்கும் கேது பலவிதமான ஞானத்தை வழங்குவார்.

  ஏழாமிட ராகு மிகுதியான ஆசையைத் தூண்டுவார். எனவே எடுத்தோம், கவிழ்த்தோம் என அவசர முடிவு எடுக்காமல் தகுந்த ஆலோசனைகளை மேற்கொண்டு முடிவுகளை எடுப்பது நல்லது. பிள்ளைகளின் திருமணம், கல்வி போன்ற சுப நிகழ்விற்கு எதிர்பார்த்திருந்த தொகை கிடைக்கும். அனுமன் சாலிசா கேட்கவும்.

  `பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×