என் மலர்
கன்னி - வார பலன்கள்
கன்னி
வார ராசிபலன் 7.9.2025 முதல் 13.9.2025 வரை
7.9.2025 முதல் 13.9.2025 வரை
தடைபட்ட பணிகள் துரிதமாகும் வாரம். ராசியில் உள்ள செவ்வாய் பகவான் வார இறுதியில் இரண்டாம் இடத்தை நோக்கி செல்கிறார். ராசிக்கு சனி செவ்வாய் சம்மந்தத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையத் துவங்கும். பல கால முயற்சிகள் வெற்றி பெறும். ராசிக்கு 6-ம் இடத்தில் கிரகணம் நடப்பதால் வாரத்தின் ஆரம்பத்தில் சற்று ஏற்ற இறக்கமான பலன்கள் நடந்தாலும் வார இறுதியில் நிலைமைகள் அனைத்தும் சீராகிவிடும்.
முக்கிய குடும்ப பிரச்சினைகளை மனம் விட்டு பேசி தீர்த்துக் கொள்வீர்கள். விவசாயிகளுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் இருந்து மானியத்துடன் கடன் கிடைக்கும். வீண் செலவால் மனசஞ்சலம் மனக் குழப்பம் உருவாகும். பெண்கள் குடும்ப விஷயங்களை வெளியில் சொல்லாதீர்கள்.
10.9.2025 அன்று மாலை 4.03 மணி முதல் 12.9.2025 அன்று மாலை 5.30 மணி வரை சந்திராஷ்டமம் இருக்கிறது. முக்கிய பணிகளை ஒத்திப்போடும் போது மன சஞ்சலமின்றி நிம்மதியாக செயல்பட முடியும். எந்தப் பொருளையும் அலட்சியமாக கண்ட இடத்தில் வைக்காதீர்கள். தினமும் சக்தி கவசம் படித்து அம்பிகையை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிபலன் 31.8.2025 முதல் 6.9.2025 வரை
31.8.2025 முதல் 6.9.2025 வரை
வீண் விரயங்களை தவிர்க்க வேண்டிய வாரம்.ராசிக்கு சனி, செவ்வாய் சம்பந்தம் உள்ளது. ராசி அதிபதி புதன் விரய ஸ்தானத்தில் விரைய அதிபதி சூரியனுடன் இணைந்துள்ளார்.பணிச்சுமை அதிகரிக்கும். தாய்மாமாவிற்கும், தம்பிக்கும் ஏற்பட்ட மோதலில் பழிச் சொல் உங்கள் பக்கம் திரும்பும். அறுவை சிகிச்சை செய்தவர்கள் குணமடைந்து இயல்பு நிலை திரும்புவார்கள். வரவிற்கு ஏற்ற செலவும் உண்டு.
புதிய எதிர்பாலின நட்பு கிடைக்கும்.உயர் அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வு உண்டு. பதவி உயர்வின் மூலம் பல நல்ல பயன்களை அடைவீர்கள். விரும்பிய கடன் தொகை கிடைக்கும் புதிய வீடு வாங்கலாம், அல்லது மாறலாம். வீடு, வாகனம் தொடர்பான கடன் முயற்சிகள் சாதகமாகும்.வீட்டில் சுபமங்கள நிகழ்வுகள் விமரிசையாக நடக்கும். அழுகை உனது வாழ்க்கை அல்ல.
துணிச்சலே உனது சக்தி என்று உணர்ந்து செயல்பட்டால் அச்சம் சாம்பலாகும்.பிரதோஷ நாட்களில் நந்திகேஸ்வரருக்கு விபூதி அபிசேகம் செய்து வழிபட்டால் ஆன்ம பலம் பெருகும். துன்பங்கள் நீங்கி நல்ல ஆற்றல்கள் பெருகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிபலன் 24.8.2025 முதல் 30.8.2025 வரை
காரிய தடைகள் நீங்கும் வாரம். ராசி அதிபதி புதன் வார இறுதி நாள் வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். கிரகங்களின் கூட்டணி கன்னி ராசியினருக்கு மிகச் சாதகமாக உள்ளது. எதிர்மறை எண்ணங்கள் விலகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கி நிம்மதி பிறக்கும். வேலை பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பார்கள். எதிர்பார்த்த அதிகாரமிக்க பதவிகளைப் பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். திட்டமிட்டு செயல்படுவதால் காரிய ஜெயம் உண்டாகும்.
நோய் பாதிப்புகள் குறைய துவங்கும்.இழுபறியான பிரச்சினைகளில் இருந்து மீண்டு வருவீர்கள். பெண்கள் வேலை பார்க்கும் இடத்தை மாற்றலாம். குடும்பத்திற்கு பொன், பொருள் வாங்குவீர்கள். புத்திர பாக்கியம், வீடு, வாகன யோகம் போன்ற தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களும் தேடி வரும்.திருமணம் மற்றும் சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தலாம். விலகிய குடும்ப உறவுகளின் புரிதல் மகிழ்ச்சி அதிகரிக்கும். விநாயகருக்கு பால் பன்னீர் அபிஷேகம் செய்து வழிபடவும்.
கன்னி
வார ராசிபலன் 17.8.2025 முதல் 23.8.2025 வரை
17.8.2025 முதல் 23.8.2025 வரை
சுப பலன்கள் நடக்கும் வாரம். ராசி அதிபதி புதன் லாப ஸ்தானத்தில் சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றுள்ளார். மனம் விரும்பும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். புதிய தெம்பு மற்றும் தைரியத்துடன் வீர நடைபோடுவீர்கள். நீண்ட காலமாக தொல்லை கொடுத்து வந்த குடும்ப பிரச்சினைகள் படிப்படியாக நல்ல முடிவுக்கு வரும்.
பணக்கவலை குறையும். பாக்கிய பலத்தால் தாராளமான வரவு செலவு, பணப்புழக்கமும் உண்டாகும். கடன்கள் தீர்ந்து மன அழுத்தங்கள் குறையும். கைநிறைய பணம் புரள்வதால் புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். இல்லத்தில் தடைபட்ட சுப நிகழ்வுகள் இனிதே நடைபெறும்.
புது வீடு கட்டலாம். சுப விரைய செலவுகள் ஏற்படும். அரசு வேலை வாய்ப்பு முயற்சி வெற்றி தரும்.
முன்னோர்களின் நல்லாசியும் குல தெய்வ அருளும் உண்டாகும். புத்திர பிராப்தம் கிடைக்கும். சிலர் கம்பெனி செலவில் வெளிநாடு சென்று பணிபுரியும் சந்தர்ப்பம் கிட்டும். காதலர்கள் விட்டுக் கொடுத்து செல்லவும். உடல் ரீதியான மன ரீதியான சங்கடங்கள் குறையும். சிவனுக்கு பச்சை கற்பூரம் அபிசேகம் செய்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிபலன் 10.8.2025 முதல் 16.8.2025 வரை
10.8.2025 முதல் 16.8.2025 வரை
சாதிக்கும் எண்ணம் மேலோங்கும் வாரம். 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் சூரியன் நிற்பதால் சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும். புதியவற்றை சாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். சிலர் ஊர் மாற்றம் அல்லது வீடு மாற்றம் செய்யலாம்.
பிள்ளைகளின் திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். சிலர் வீடு கிரக பிரவேசத்திற்கு தயாராகுவீர்கள் சுப செலவிற்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவி கிடைக்கும். வயது முதிர்ந்த பெண்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். புதிய அணிகலன்கள், அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். 14.8.2025 அன்று காலை 9.06 மணி முதல் 16.8.2025 அன்று காலை 11.43 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உழைப்பின் மேல் ஆர்வம் குறைந்து அதிர்ஷ்டத்தின் நோக்கி பயணிக்கும் எண்ணம் மேலோங்கும். கோகுலாஷ்டமி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு அதிரசம் வைத்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிபலன் 3.8.2025 முதல் 9.8.2025 வரை
3.8.2025 முதல் 9.8.2025 வரை
சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசிக்கு சனி செவ்வாய் சம்பந்தம். கிரடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை கவனமாக கையாள வேண்டும். பொருளாதார விஷயத்தில் கவனம் செலுத்தி விரயத்தை சேமிப்பாகவோ, சுப விரயமாகவோ மாற்ற முறையான திட்டமிடல் தேவை. குடும்பத்தில் சங்கடங்களை தவிர்க்க பேச்சை கட்டுப்படுத்துவது நல்லது. உணவுக் கட்டுப்பாடு அவசியம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். சிலருக்கு விபத்து கண்டம், சர்ஜரி அவமானம் போன்ற பாதிப்புகள் இருக்கும். வேலை மாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளை சுய ஜாதகப் பரிசீலனைக்குப் பிறகு செய்யவும். ஒரு கடனை அடைக்க, மறுகடன் வாங்குவது அல்லது பழைய கடனை அடைக்க, புது கடன் வாங்குவது என்று கடனுக்கு மேல் கடன் கூடிக்கொண்டு போகும்.
சிலருக்கு விருப்ப விவாகம் நடக்கும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் கிரகங்களின் இயக்கம் பாதிப்பை தராது. அரசியலில் உள்ளவர்களுக்கு இது நெருக்கடியான நேரம். வரலட்சுமி நோன்பு நாளில் லலிதா சகஸ்ஹர நாமம் படித்து மகாலட்சுமியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிபலன் 27.7.2025 முதல் 2.8.2025 வரை
27.7.2025 முதல் 2.8.2025 வரை
எதிர்மறை எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டிய காலம். ராசியில் 3,8ம் அதிபதி செவ்வாய் சனி பார்வையில் சஞ்சரிக்கிறார். உடன் பிறந்தவர்களுடன் சொத்து தொடர்பான வம்பு வழக்கு வரலாம். நினைப்பதொன்று நடப்பது ஒன்றாக இருக்கும். கண் திருஷ்டி அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினருடன் பொதுச்சுவர், காம்பவுண்ட் சுவர் தொடர்பான பிரச்சினையால் மன உளைச்சல் அதிகரிக்கும்.
ஞாபக மறதி உண்டாகும். முக்கிய ஆவணங்களை கவனமாக கையாள வேண்டும். ஜாமீன் பிரச்சினை ஏலச் சீட்டு விசயங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும்.சிறு சிறு உடல் உபாதைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணிபுரியும் பெண்களின் அறிவுத்திறன் கூடும்.
குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பண விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சுபகாரியச் செய்திகளால் சுபசெலவுகள் அதிகரிக்கும்.திருமண வயதினருக்கு வெகு விரைவில் திருமணம் நிச்சயிக்கப்படும். வெள்ளிக்கிழமை சப்த மாதர்களை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிபலன் 20.7.2025 முதல் 26.7.2025 வரை
20.7.2025 முதல் 26.7.2025 வரை
நினைத்த காரியங்கள் வேகமாக நடக்கும் வாரம். ராசிக்கு 11ம் இடமான லாப ஸ்தானத்தில் ராசி அதிபதி புதன் சூரியன் சேர்க்கை புத ஆதித்ய யோகம். ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கி உடல் சுறுசுறுப்படையும். வாழ்க்கைத் துணைக்கு அரசு வேலை கிடைக்கும். சிலருக்கு வேலையில் மாற்றம் உண்டாகும். தொழில் நல்ல லாபத்தை அள்ளித்தரும்.
சனி வக்ரமாக இருப்பதால் செலவுகள் கூடும். ஆரோக்கிய குறைபாடு சீராகும். மூட்டு அறுவை சிகிச்சை நல்ல பலன் தரும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சீரான பொருளாதார முன்னேற்றத்தால், மனதிற்குப் பிடித்தபடி மனை, வண்டி என அனைத்தும் அமையும்.
மாணவர்களின் உயர் கல்வி முயற்சி சித்திக்கும். குடும்பத்துடன் பூர்வீகம் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைப்பேறு, புதிய தொழில் வாய்ப்புக்கள், அதிர்ஷ்ட வாய்ப்புகள், யோகங்கள், புண்ணிய தல தரிசனங்கள் ஆகியவை கிடைக்கும்.
ஆடி வெள்ளிக்கிழமை கன்னிப் பெண்களுக்கு ஆடை தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிபலன் 13.7.2025 முதல் 19.7.2025 வரை
13.7.2025 முதல் 19.7.2025 வரை
நிதானமாக செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் லாப ஸ்தானத்தில் விரயாதிபதி சூரியனுடன் சேர்க்கை பெற்று புத ஆதித்ய யோகம் ஏற்பட்டு உள்ளது. சிலருக்கு குறுக்கு வழியில் சம்பாதிக்கும் எண்ணம் தோன்றும். தொழிலால், தொழில் கூட்டாளிகளால் நன்மை உண்டாகும். அதிக முதலீடு கொண்ட புதிய செயல்களைத் தவிர்க்கவும்.
பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை அதிகரிக்கும். காதல் விவகாரங்களால் அவமானம் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் சற்று குறைவுபடும். பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சு வார்த்தைகள் இழுபறியாகும். வீடு மாற்றம், வேலை மாற்றம் உண்டாகும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகத்திற்கு சென்று வருவதை ஒத்தி வைப்பீர்கள்.
பாகப்பிரிவினைகள் சுமூகமாகும். குல தெய்வ வழிபாடு முன்னேற்றம் தரும். 18.7.2025 அன்று அதிகாலை 3.39 மணி முதல் 20.7.2025 அன்று காலை 6.12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நிர்வாகத்திறமை குறையும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். தினமும் விநாயகர் அகவல் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிபலன் 6.7.2025 முதல் 12.7.2025 வரை
6.7.2025 முதல் 12.7.2025 வரை
விருப்பங்கள் நிறைவேறும் வாரம். 10-ம்மிடமான ஜீவன ஸ்தானத்தில் சூரியனும், குருவும் சேர்ந்து சிவராஜ யோகத்தை ஏற்படுத்துவதால் எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி நடக்கும். தர்ம சிந்தனைகள் மேலோங்கும். எந்திர வாழ்க்கையில் இருந்து விடுபட்டு சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுப்பீர்கள். புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவீர்கள்.
பொருளாதார வளம் சிறக்கும். ஆன்லைன், பங்கு சந்தை வர்த்தகங்கள் அபரிமிதமான லாபத்தைக் கொடுக்கும். சிறிய முதலீட்டில் அதிக லாபம் பார்ப்பீர்கள். சுபச் ெசலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். பெற்றோரகளின் நல் ஆசிகளைப் பெறுவீர்கள். விரும்பிய வங்கி கடன் இந்த வாரத்தில் கிடைக்கும்.
பெண்களால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளால் ஏற்பட்ட கவலை குறையும். திருமணத்தடை அகலும். வீடு, வாகன யோகம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை, சேமிப்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் நிலவிய குறைபாடுகள் அகலும். மொத்தத்தில் சங்கடங்கள் விலகி சாதகமான முன்னேற்றம் ஏற்படும். பவுர்ணமி அன்று சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிபலன் 29.6.2025 முதல் 5.7.2025 வரை
29.6.2025 முதல் 5.7.2025 வரை
லாபகரமான வாரம். ராசி அதிபதி புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து நல்ல பெயர் கிடைக்கும். கடந்த கால இழப்புகளை ஈடு செய்யும் விதத்தில் தொழிலில் உயர்வு உண்டாகும். சிலர் உத்தியோகத்தில் இருந்து கொண்டே, தொழில் செய்து வருமானத்தை பெருக்குவார்கள்.
கண்டகச் சனியின் காலம் என்பதால் அகலக்கால் வைப்பதை தவிர்க்கவும்.சொந்த வீட்டில் இருந்து வாடகை வீட்டிற்கு சென்றவர்கள் மீண்டும் சொந்த வீட்டிற்கு வந்து விடுவீர்கள். சாஸ்திர ஞானம் அதிகரிக்கும்.வேலை பளு அதிகமாகும். குடிப்பழக்கம், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மருத்துவத்தில் சீராக வாய்ப்பு உள்ளது.
கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் மூலம் சில பொருள் வரவுகள் ஏற்படும். அரசு வேலை முயற்சி சாதகமாகும். சிலருக்கு அதிக தொழில் முதலீடு செய்யக் கூடிய தொழில் பார்ட்னர்கள் கிடைப்பார்கள். பழைய வாகனத்தை கொடுத்து புதிய 2, 4 சக்கர வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். திருமண தடை அகலும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புதன் கிழமை புத பகவானை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிபலன் 22.6.2025 முதல் 28.6.2025 வரை
22.6.2025 முதல் 28.6.2025 வரை
மீண்டும், மீண்டும் வெற்றி வாய்ப்புகள் குவியும் வாரம். ராசி அதிபதி புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். பண வரவு பல வழிகளில் பன் மடங்காக அதிகரிக்கும். தனம், தான்யம், புகழ், செல்வாக்கு, வீரம், அறிவு இவற்றுடன் அஷ்ட ஐஸ்வரியமும் கிடைக்கும். மனோபலம், தேகபலம், பணபலம் ஆகிய மூன்றும் குடிபுகும். புதிய தொழிலுக்கு எடுக்கும் முயற்சிகள் நல்ல மாற்றத்தை தரும்.
முதலாளி, தொழிலாளிகளிடம் கருத்து ஒற்றுமை மேலோங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு உண்டு. பொது வாழ்வில் இருப்பவர்களின் வெளிப்படையான பயமற்ற கருத்துகள் மக்கள் மத்தியில் நன் மதிப்பை அதிகரிக்கும். தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்து செயல்படுவதால் மன ஒற்றுமை அதிகரிக்கும்.
திருமண முயற்சிகள் இழுபறியாகும். சிலரின் மறு திருமண முயற்சி சித்திக்கும். 22.6.2025 அன்று இரவு 11.03 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத சில செலவுகள் வரலாம். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய பய உணர்வு இருந்து கொண்டே இருக்கும். அமாவாசையன்று துர்க்கை அல்லது காளியை வழிபட அனைத்து பாதிப்புகளும் குறையும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






