என் மலர்
கன்னி - வார பலன்கள்
கன்னி
வார ராசிபலன் 15.6.2025 முதல் 21.6.2025 வரை
15.6.2025 முதல் 21.6.2025 வரை
புத்துணர்வான வாரம். ராசிக்கு 4-ம்மிடமான சுக ஸ்தானத்தை குருபகவான் பார்ப்பதால் உங்கள் செயல்களில் புத்துணர்ச்சியும், புதுமையும், விவேகமும் இருக்கும். வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதானத்துடன் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். தாய்மாமா அல்லது தாய்வழி தாத்தா மூலம் பொருள் உதவி கிடைக்கும். தவணை முறை திட்டத்தில் சொத்து வாங்குவீர்கள்.
பாதியில் நிற்கும் கட்டிட பணிகள் துரிதமாகும். வியாபாரத்தில் சில சங்கடங்களை சமாளிக்க வேண்டி வரும். திருமண முயற்சி சித்திக்கும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் குறையும். முதியோர் இல்லத்திற்குச் சென்ற பெற்றோர்கள் வீடு திரும்புவார்கள். சிலர் புதிய சொந்த தொழில் துவங்க வாய்ப்புள்ளது. பெண்களுக்கு திருமண வாழ்க்கை மன நிறைவைத் தரும்.
20.6.2025 அன்று இரவு 9.45 -க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் சக ஊழியர்கள் மற்றும் அண்டை, அயலாருடன் எச்சரிக்கையாக பழகவும். சிலருக்கு காது, மூக்கு, தொண்டை உபாதைகளுக்கு சிகிச்சை செய்ய நேரும். தினமும் காயத்திரி மந்திரம் கேட்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிபலன் 08.06.2025 முதல் 14.06.2025 வரை
08.06.2025 முதல் 14.06.2025 வரை
நினைத்தது நிறைவேறும் வாரம். ராசி அதிபதி புதன் 7, 10-ம் அதிபதி குருவுடன் சேர்க்கை செய்வதால் உற்சாகமான மன நிலை உங்கள் விருப்பங்கள், தேவைகளை நிறைவேற்றும். பொது நல சிந்தனை மிகுதியாக இருக்கும். ஆன்மீக நாட்டம், கலை, இலக்கிய ஆர்வம் உண்டு. பங்கு சந்தை ஆர்வம் அதிகரிக்கும். செல்வநிலை உயரும். சொல்வாக்கால் குடும்ப உறவுகளை வசப்படுத்துவீர்கள்.
குடும்பத்தில் சலசலப்பு குறைந்து கலகலப்பு மிகுதியாகும். குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். சில அசவுகரியம் இருந்தாலும் வாரம் முழுவதும் பல தடைகளையும் கடந்து வெற்றி உண்டாகும். தொழில், வணிகம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராக திகழ்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் கடுமையான பணியை கூட சிறப்பாக செய்து முடிப்பார்கள்.
பெண்களுக்கு மங்களகரமான மகிழ்சியான இல்லறம் அமையும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனிக் குடித்தனம் சென்ற வாரிசுகள் வீடு வந்து சேருவார்கள். திருமணம், பிள்ளைபேறு என மனம் விரும்பும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். பிள்ளைகளின் படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்கும். நவகிரக புதனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிபலன் 01.06.2025 முதல் 07.06.2025 வரை
01.06.2025 முதல் 07.06.2025 வரை
மனக் கவலைகள் அகலும் வாரம். 9-ம் மிடமான பாக்கிய ஸ்தானத்தில் ராசி அதிபதி புதன் சூரியனுடன் இணைகிறார். பல வருட குடும்ப சிக்கல்கள் மறைந்து மகிழ்ச்சி அதிகமாகும். சிக்கலான சில காரியங்கள் கூட நல்லவிதமாக முடியும். சமுதாயத்தில் பிறரை ஆச்சரியப்பட வைக்கும் உயர்வான நிலையை எட்டும் வாய்ப்பு உள்ளது. நினைத்தது நிறைவேறும்.
குடும்பத்தின் மேல் இருந்த கண் திருஷ்டி அகன்று நல்ல ஆரோக்கியம் கூடும். தொழில் மூலம் நல்ல பொருளாதார வளர்ச்சி ஏற்படும். சமுதாய அந்தஸ்து, வெற்றி, புகழ் செல்வாக்கு பெறுவீர்கள். வீட்டிலும், தொழில் இடத்திலும் லட்சுமி கடாட்சம் உண்டாகும். கண்டகச் சனியின் காலம் என்பதால் தம்பதிகள் ஒருவர் விஷயங்களில் பிறர் தலையிடாமல் அவரவர் வேலையை மட்டும் பார்ப்பது நல்லது.
பிள்ளைகள் பெற்றோர்களை புரிந்து கொள்வார்கள். எதிர்பாராத சில செலவுகளை சந்திக்க நேர்ந்தாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். தாய்வழிச் சொத்துப் பிரச்சினையில் எதிர்பாராத திருப்புமுனை உண்டாகும். தடைபட்ட கல்வியை மீண்டும் தொடர முடியும். ஸ்ரீ தன லட்சுமியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிபலன் 25.05.2025 முதல் 31.05.2025 வரை
25.05.2025 முதல் 31.05.2025 வரை
திட்டமிட்ட செயல்களால் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். ராசியை விட்டு கேது அகன்றதால் ஆரோக்கிய தொல்லை மன அழுத்தம் சீராகும். 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் தொழிலில் விரும்பத்தகுந்த மாற்றம் கிடைக்கும். புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள்.
உத்தியோகத்தில் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல கம்பெனியில் இருந்து அழைப்பு வரும். பொருள் வரவு அதிகரிக்கும். முன்னோர்களின் கூட்டுத் தொழிலில் சித்தப்பா, பெரியப்பாவுடன் பங்கு தாரராக இணையும் வாய்ப்பு உள்ளது. சகோதர, சகோதரிகளின் திருமண முயற்சியில் அலைச்சல் மிகுந்த பயணம் உண்டு.
குடும்பத்தில் நிம்மதியும் சந்தோசமும் அதிகரிக்கும். புத்திர பிராப்தத்தில் நிலவிய தடைகள் நீங்கும்.26.5.2025 அன்று மதியம் 1.40 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மேல் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும்.கோபத்தால், தெளிவற்ற சிந்தனையால் நல்ல வாய்ப்புகளை தவற விடலாம். அமாவாசையன்று தயிர் சாதம் தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிபலன் 18.05.2025 முதல் 24.05.2025 வரை
18.05.2025 முதல் 24.05.2025 வரை
மனக்கவலைகள் நீங்கி புத்துணர்வு உண்டாகும் வாரம். ராசியை விட்டு கேது பகவான் வெளியேறிவிட்டார். முயற்சிகளும், எண்ணங்களும், திட்டங்களும் செயல் வடிவம் பெறும். ஜென்ம கேதுவால் சந்தித்த சோதனைகள் சாதனைகளாக மாறும். குடியிருக்கும் வீட்டை மாற்றலாம் அல்லது வேலை பார்க்கும் இடத்தை மாற்றலாம்.
குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உண்டாகும்.தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலுக்காக கடன் பெறலாம். சொத்துக்களால் ஆதாயம் உண்டு. தடைபட்ட வாடகை வருமானம் வந்து சேரும். உறவுகளிடம் அமைதிப் போக்கினை கையாளவும். வீடு, வாகனம் போன்ற சுப செலவுகளுக்கு மாமனாரிடம் இருந்து கணிசமான தொகை கிடைக்கும். உடல் நிலையில் நிலவிய பாதிப்பு அகலும்.
ஆடம்பரமான ஆடைகள், அணிமணிகள் வாங்கி மகிழ்வீர்கள். அதே நேரத்தில் தேவைக்கு அதிகமாக கடன்பட்டால் கண்டகச் சனியின் காலத்தில் நிலைத்து நிற்பது மிகவும் கடினம் என்பதால் கடன் விசயத்தில் கவனம் தேவை. நம்பிக்கையும், தைரியமும், நிதானமும் இருந்தால் வெற்றி உங்களுக்கே . திருநள்ளாறு சென்று வர சுபமான திருப்பங்கள் உண்டாகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிபலன் 11.5.2025 முதல் 17.5.2025 வரை
11.5.2025 முதல் 17.5.2025 வரை
தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய வாரம். ராசியை விட்டு சர்ப்ப கிரகம் அகலப் போகிறது என்பதே கன்னி ராசிக்கு மிகுந்த மகிழ்ச்சியான செய்தி. புதிய வேலை வாய்ப்புகளால் பிரகாசமான எதிர்காலம் உருவாகும். மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். ஆன்லைன் வர்த்தகர்களுக்கு தொழில் நல்ல லாபத்தை பெற்றுத் தரும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கி மகழ்வீர்கள்.
பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உடன் பிறந்தவர்கள், நண்பர்களின் உதவி பக்க பலமாக இருக்கும். நீண்டநாளாக நிறைவேற்ற முடியாமல் தடைபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். ராசியை சனி பார்ப்பதால் மனஅழுத்தம். மனதில் கலக்கம் தோன்றும்.
ஞாபக சக்தி குறையும். ஒரு சில நேரங்களில் சின்ன சின்ன சங்கடங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் சமாளித்து விடுவீர்கள். முன்னோர்களின் பரம்பரை வியாதியான கை, கால் வலி, சுகர், பிரஷர் போன்றவைகள் தலை தூக்கும். சிலர் கூட்டுக் குடும்பத்தில் இருந்து பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். சித்ரா பவுர்ணமி அன்று கிருஷ்ணர் வழிபாடு நல்லது.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிபலன் 4.5.2025 முதல் 10.5.2025 வரை
4.5.2025 முதல் 10.5.2025 வரை
சிந்தித்து செயல்பட வேண்டிய காலம். ராசிக்கு குருப் பார்வை இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளது. ராசியை விட்டு கேது பகவான் விலகப் போகிறார். இது கண்டகச் சனியின் காலம். முக்கிய கிரகங்கள் பெயர்ச்சி ஆவதால் சில, பல மாற்றம் உண்டாகப் போகிறது. நிதி நிலையில் சாதகமான மாற்றம் உண்டு. பொன், பொருள் பற்று அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட பொருள் வரவு உண்டு.
சிலரின் விருப்ப விவாகம் சித்திக்கும். விவாகரத்து வழக்குகள் சாதகமாகும். குடும்ப உறுப்பினர்கள் வாக்குவாதத்தை தவிர்த்து மன அமைதியை தக்க வைத்துக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்து தொடர்பான பேச்சு வார்த்தை நடக்க வாய்ப்பு உள்ளது. விவசாயிகளுக்கு அரசின் ஆதரவு உண்டு. நீண்ட நாட்களுக்குப் பின் தாய் மாமாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். கண்டக சனியின் தாக்கம் தெரியும். எனவே நண்பர்களை, தொழில் கூட்டாளிகளை வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது சிறப்பு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். சிவ வழிபாட்டால் நன்மைகள் அதிகரிக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிபலன் 27.4.2025 முதல் 03.5.2025 வரை
27.4.2025 முதல் 03.5.2025 வரை
சோதனைகள் சாதனைகளாக மாறும் வாரம். ராசியை விட்டு கேது பகவான் வெகு விரைவில் வெளியேறப்போகிறார். கேதுவின் தாக்கம் குறைவது உங்களுக்கு தெரியத் துவங்கும். விவசாயிகள், சமையல் கலைஞர்கள், அழகு, ஆடம்பர பொருள் விற்பனையாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். அனைத்து துறையினருக்கும் பண வரவுகள் அதிகரிக்கும்.
7ம் இடத்தை ராகு கடப்பதால் பிரிந்த தம்பதிகள் கூடி மகிழ்வார்கள். கூட்டுக் குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் கட்டுப்படும். நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகள், மாமியாரால் ஏற்பட்ட வருத்தங்கள் சீராகும். திருமணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாகும் வழக்குகள் சாதகமாகும்.
வேலை இழந்தவர்கள் இந்த வார இன்டர்வியூவில் சாதகமான பதில் உண்டு. வீடு, வயல், தோட்டம், மனை வாங்கு வதில் நிலவிய சட்ட சிக்கல்கள் தீரும். 29.4.2025 அன்று அதிகாலை 2.53 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட சிறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். தினமும் மகா விஷ்ணு அஷ்டோத்திரம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிபலன் 20.4.2025 முதல் 26.4.2025 வரை
20.4.2025 முதல் 26.4.2025 வரை
திருப்புமுனை உண்டாகும் வாரம். சற்றேறக்குறைய ஒரு மாத காலத்தில் ராசியை விட்டு கேது பகவான் பெயர்ச்சியாகிறார். அதற்கான சில நல்ல பலன்கள் இப்பொழுதே தெரியத் துவங்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட இன்னல்களும், இம்சைகளும், துயரங்களும் விலகும். சுதந்திர உணர்வு உண்டாகும். சிலரின் விவாகரத்து வழக்கிற்கும் தீர்ப்பு கிடைக்கும்.
பணியாளர்களுக்கு சக ஊழியர்களால் பணியில் நிலவிய சங்கடங்கள் மாறும். உங்களின் வாழ்க்கைத் துணையை இந்த வாரம் சந்திப்பீர்கள். சிலரின் கடனை அடைக்க வாழ்க்கைத் துணை அல்லது நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.பாகப் பிரிவினையில் சகோதர, சகோதரிக்காக விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். சிலர் அரசு வேலைக்கு தவறான நபரிடம் பணம் கொடுத்து ஏமாறலாம். நெடுநாளைய தரித்திரம் விலகும். சுப விரயங்கள் மிகுதியாகும். கடன் பிரச்சினையில் இருந்து விடுபடும் மார்க்கம் தென்படும். முக்கிய முடிவுகளில் சம்பந்தப்பட்டவர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. அங்காளம்மனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிபலன் 13.4.2025 முதல் 19.4.2025 வரை
13.4.2025 முதல் 19.4.2025 வரை
தடை, தாமதங்களை தகரும் வாரம். ராசி அதிபதி புதன் தன் சொந்த வீட்டை தானே பார்க்கிறார். உள்ளம் மகிழும் சுப நிகழ்வுகள் இல்லத்தில் நடைபெறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளிடையே நிலவிய மனப் பேராட்டம் அகலும். பாகப் பிரிவினையில் நல்ல முடிவு எடுக்கப்படும். திருமண முயற்சிகள் கைகூடும். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும்.
சொத்துக்களுக்கு நல்ல வாடகை கிடைக்கும். தொழில் பங்காளிகளை சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள், PF பணம், பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும். கடன் தொல்லை குறையும். மூத்த சகோதர, சகோதரிகள் சித்தப்பா மூலம் நல்ல ஆதாயம் உண்டு. குலதெய்வம் தெரியாதவர்கள் அதை கண்டுபிடிக்க முயற்சிக்கலாம். பூர்வீகம் தெரியாதவர்களுக்கு பூர்வீகம் தெரியும். அயல்நாடு செல்ல எதிர்பார்த்த விசா கிடைக்கும். கணவருடன் இருந்த ஈகோ மாறும். இல்லத்தரசிகளுக்கு இது ரொம்ப நல்ல வாரம். கால பைரவரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிபலன் 06.4.2025 முதல் 12.4.2025 வரை
06.4.2025 முதல் 12.4.2025 வரை
தன்னம்பிக்கையால் காரியம் சாதிக்கும் நேரமிது. ராசி அதிபதி புதன் வக்ர நிவர்த்தி ஆவதால் வழக்குகளால் பாகப் பிரிவினையால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும்.விண்ணப்பித்த வீடு, வாகனக் கடன் இந்த வாரம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் குறைவது போல் இருந்தாலும் பண வரவு திருப்தியாக இருக்கும். சிலர் பழைய தொழில் கூட்டாளிகளை விலக்கி விட்டு புதிய தொழில் கூட்டாளிகளை சேர்க்கலாம். ஒரு சிலர் விருப்ப ஓய்வு பெற்று சுய தொழில் தொடங்கலாமா என்று சிந்திக்கக் கூடிய நேரம்.
பிள்ளைகள் தொழில், கல்விக்காக இடம் பெயரலாம். தடைபட்ட உயர் கல்வி வாய்ப்பு கூடி வரும்.மேலதிகாரி அதிக பணிச்சுமையை வழங்கலாம். திருமண முயற்சி சாதகமாகும். உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும்.வயோதிகர்களுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கும். சிலருக்கு புதிய எதிர்பாலின நட்பால் அசவுகரியங்கள் ஏற்படும். வீண் மனஸ்தாபங்களைத் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும். சக பணியாளர்களின் குடும்ப விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. சங்கர நாராயணர் வழிபாடு மகத்தான மாற்றத்தை தரும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிபலன் 30.3.2025 முதல் 5.4.2025 வரை
30.3.2025 முதல் 5.4.2025 வரை
குதூகலமான வாரம். 5,6-ம் அதிபதி சனிபகவான் 4,7-ம் அதிபதி குரு பகவானைப் பார்க்கிறார். இன்னும் இரண்டு மாதத்திற்கு ராசிக்கு குருப் பார்வை உள்ளது. பொருளாதார முன்னேற்றமும் தாராளமான வரவு, செலவு காணப்படும். அடுத்தவர்களின் பணம் உங்கள் கையில் புரளும். தாய், தந்தை, வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத உதவிகள் மற்றும் பணவரவு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மனைவி வழி சொத்தில் நிலவிய குழப்பங்கள் நீங்கும். முழுப் பங்கும் கிடைத்துவிடும். அவ்வப்போது மருத்துவச் செலவுகள் வரலாம். எனவே உடல் நலனில் கவனமும் அக்கறையும் தேவை.
பெண்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு இரவல் கொடுத்த நகைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். தாய் மாமன் உறவுகளால் அனுகூலம் கிடைக்கும். செல்வாக்கு, திறமை மற்றும் கவுரவத்தோடு செயல்பட்டு சிறப்பும் பெருமையும் அடைவீர்கள்.30.3.2025 அன்று மாலை 4.35 மணி முதல் 1.4.2025 அன்று மாலை 4.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் அமைதியின்மையும் ஒருவிதமான போராட்டமும் உருவாகும். தினமும் நவகிரகங்களை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






