என் மலர்tooltip icon

    கன்னி - வார பலன்கள்

    கன்னி

    30.3.2025 முதல் 05.4.2025 வரை

    குதூகலமான வாரம். 5,6-ம் அதிபதி சனிபகவான் 4,7-ம் அதிபதி குரு பகவானைப் பார்க்கிறார். இன்னும் இரண்டு மாதத்திற்கு ராசிக்கு குருப் பார்வை உள்ளது. பொருளாதார முன்னேற்றமும் தாராளமான வரவு, செலவு காணப்படும். அடுத்தவர்களின் பணம் உங்கள் கையில் புரளும். தாய், தந்தை, வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத உதவிகள் மற்றும் பணவரவு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    மனைவி வழிச் சொத்தில் நிலவிய குழப்பங்கள் நீங்கும். முழுப் பங்கும் கிடைத்துவிடும். அவ்வப்போது மருத்துவச் செலவுகள் வரலாம். எனவே உடல் நலனில் கவனமும் அக்கறையும் தேவை. பெண்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு இரவல் கொடுத்த நகைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். தாய் மாமன் உறவுகளால் அனுகூலம் கிடைக்கும். செல்வாக்கு, திறமை மற்றும் கவுரவத்தோடு செயல்பட்டு சிறப்பும் பெருமையும் அடைவீர்கள்.

    30.3.2025 அன்று மாலை 4.35 மணி முதல் 1.4.2025 அன்று மாலை 4.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் அமைதியின்மையும் ஒருவிதமான போராட்டமும் உருவாகும். தினமும் நவகிரகங்களை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    வார ராசிபலன் 23.3.2025 முதல் 29.3.2025 வரை

    23.3.2025 முதல் 29.3.2025 வரை

    எண்ணங்களும் லட்சியங்களும் ஈடேறும் வாரம். சில வாரங்களில் குருப் பெயர்ச்சியானவுடன் புதிய தொழில் தொடங்க அதிர்ஷ்டமான காலம் வந்துவிடும். அதற்கான ஆயத்த முயற்சியில் இப்பொழுதே ஈடுபடுவீர்கள். கண்கள் தொடர்பான பிரச்சினைகளில் கவனம் தேவை. பயணங்களால் பயன் கிடைக்கும். சொத்து வாங்கும், விற்கும் முயற்சி ஈடேறும். படித்து முடித்த மகனின் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைத்து விடும். எதிர்பார்த்த அதிர்ஷ்ட பணம் கிடைக்கும். கடன் தொகை வெகுவாக குறையும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். புதிய சொத்துகள் சேரும். திருமணம் நிச்சயமாகும்.

    புத்திர பிராப்தம் கிடைக்கும். தந்தை, மகன் உறவில் பேதம் உண்டாகலாம். சிலர் கண் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்லலாம். பெரிய பிரச்சனையில் மாட்டியவர்கள் அதிர்ஷ்டத்தால் தப்பிப்பார்கள். சில பிள்ளைகள் எதிர்கால முன்னேற்றத்திற்கு பெற்றோரை பிரிந்து வெளியூர் செல்லலாம். தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சியில் ஆர்வம் பிறக்கும். புதிய முயற்சியில் வெற்றியும், லாபத்தையும் பெற அமாவாசையன்று சிவ பெருமானுக்கு பச்சைக் கற்பூர அபிஷேகம் செய்ய வேண்டும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    வார ராசிபலன் 16.3.2025 முதல் 22.3.2025 வரை

    16.3.2025 முதல் 22.3.2025 வரை

    கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டிய வாரம். சனி சந்திரனைத் தவிர்த்து ஏனைய அனைத்து கிரகங்களும் ராசியுடன் சம்பந்தம் பெறுகிறது. ராசி மற்றும் லக்னத்தை அதிக கிரகம் பார்க்காமல் இருப்பது நல்லது. உள்ளுணர்வால் தொழிலில், வாழ்வில் ஏற்படப் போகும் அனைத்து ஏற்ற இறக்கங்களையும் உணர்ந்து செயல்படுவீர்கள். மனரீதியான குழப்பங்கள் வந்து விலகும். அடுத்தவரிடம் பேசும் போதும் கருத்து தெரிவிக்கும் போதும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது.

    வார ராசிபலன் 16.3.2025 முதல்வார ராசிபலன் 16.3.2025 முதல் 22.3.2025 வரை 22.3.2025 வரைகுடும்ப உறவுகளிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். தொழில் பங்குதாரர்களால் சிலருக்கு வம்பு, வழக்கு உருவாகலாம். உத்தியோகத்தில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள் தடைபடும். சிலருக்கு மருத்துவச் செலவு ஏற்படலாம். அன்னையின் அன்பு அரவணைப்பு மற்றும் உதவிகளும் ஆறுதலாய் இருக்கும். மேலும் இது கண்டகச் சனியின் காலம் என்பதால் சுய ஜாதக தசை புத்திக்கு ஏற்ப செயல்படுவது உத்தமம். தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    வார ராசிபலன் 9.3.2025 முதல் 15.3.2025 வரை

    9.3.2025 முதல் 15.3.2025 வரை

    பொறுமையை கடைபிடிக்க வேண்டிய வாரம். ராசிக்கு குரு, செவ்வாய், புதன், சுக்ரன், ராகு பார்வை. வார இறுதி நாளில் சூரியனும் மீனத்திற்கு சென்று ராசியைப் பார்ப்பார்.ராசியை அதிக கிரகம் பார்ப்பதால் உற்றார், உறவினர்கள், உடன் பிறந்தவர்கள் மூலம் சிறு சிறு மனத்தாங்கல் உருவாகும். குறைந்த ஊதியத்திற்கு அதிக நேரம் உழைக்க நேரும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.

    அரசு பொதுத் தேர்வு நடந்து கொண்டு இருப்பதால் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. இளம் பருவத்தினரும் பெண்களும் யாரையும் நம்பி மனதில் உள்ள குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளக் கூடாது. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். திரைக் கலைஞர்கள் வளம் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. தம்பதிகளிடம் ஒற்றுமை மேலோங்கும். சிலருக்கு கட்டிய வீடோ, காலிமனையோ வாங்குவதற்கு இப்போது சந்தர்ப்பம் அமையும். மாசி மகத்தன்று சிவ வழிபாடு செய்யவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    வார ராசிபலன் 02.03.2025 முதல் 08.03.2025 வரை

    02.03.2025 முதல் 08.03.2025 வரை

    வெற்றிகரமான வாரம். ராசி அதிபதி புதன் தன் வீட்டைத் தானே பார்க்கிறார். மிக மிக சிறப்பான நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தொட்டது எல்லாம் துலங்கும். ஜனவசியம் ஏற்படும். தெளிவான மன நிலையோடு செயலாற்றுவீர்கள்.

    குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தன வரவு மகிழ்ச்சி தரும். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து குடும்ப வாழ்வாதாரம் உயரும். பழகிய வட்டாரத்தில் மதிப்பும், அந்தஸ்தும் கூடும். கண்டகச் சனி துவங்குவதால் பூர்வீக குலத்தொழிலில் புதிய பங்குதாரர் இணையலாம்.

    பழைய பங்குதாரர் விலகலாம். வம்பு வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பூர்வீகச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் விலகி சாதகமான முடிவுகள் கிடைக்கும். சொத்துக்காக பிரிந்து சென்ற உறவுகள் தேடி வருவார்கள்.

    3.3.2025 அன்று மாலை 6.39 முதல் 5.3.2025 காலை 8.13 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உங்கள் பேச்சை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள் என்பதால் பேச்சில் கவனம் தேவை. பிறரின் பிரச்சனைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். விநாயகர் வழிபாட்டால் வினைகள் அகலும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    வார ராசிபலன் 23.2.2025 முதல் 01.03.2025 வரை

    23.2.2025 முதல் 01.03.2025 வரை

    திட்டமிட்டு செயல்படும் செயல்கள் பூர்த்தியாகும் வாரம். ராசி அதிபதி புதன் நீச்ச பங்க ராஜ யோகம் பெறுகிறார். 2,9-ம் அதிபதி சுக்ரன் உச்சம் என கிரக நிலவரம் மிக சாதகமாக உள்ளது. தொழிலில் அபிவிருத்தியும் லாபமும் பெருகும். பணிபுரியும் இடத்தில் சக நண்பர்களிடம் ஏற்பட்ட மனபேதம் தீரும். வரவிற்கு ஏற்ற செலவும் இருக்கும்.

    வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். பெண்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு அதிகமாகும். தாய்வழிச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வரும். சிலருக்கு சொத்துக்கள் அடமானம், விற்றல் மூலமும் பணம் கிடைக்கும்.

    சிலருக்கு சொத்துக்கள் வாங்க, கட்ட, விஸ்தரிக்கத் தேவையான பொருள் உதவி கிடைக்கும். சிலர் தொழில், உத்தியோக நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேற நேரும்.

    குல தெய்வம் பூர்வீகம் தெரியாதவர்கள் அதை தெரிந்து கொள்ள முயல்வீர்கள். பல வருடங்களாக திருமணத்தடையை சந்தித்த கன்னி ராசியினருக்கு திருமணம் நடந்து முடியும். ஒரு சிலருக்கு சட்ட சிக்கலான இரண்டாம் திருமணமும் நடக்கும். மகா சிவராத்திரியன்று புனுகு சாற்றி சிவ வழிபாடு செய்யவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    வார ராசிபலன் 16.2.2025 முதல் 22.2.2025 வரை

    16.2.2025 முதல் 22.2.2025 வரை

    திடீர் முன்னேற்றங்கள் உண்டாகும் வாரம். ராசியை குரு, செவ்வாய் பார்ப்பதால் உங்கள் செயல்பாடுகள் வெற்றிகரமாக அமையும். அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் உங்களை வழி நடத்த போகிறது. வீட்டில் சுப காரியப் பேச்சு வார்த்தைகள் நடக்கும்.

    வீடு, வாகன யோகம் மற்றும் முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கும். சகோதர சச்சரவுகள் விலகும். குடும்ப உறுப்பினர்கள் முயற்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். விரைவில் கண்டகச் சனி துவங்குவதால் சிலர் தொழில், வேலைக்காக குடும்பத்தை பிரிந்து வெளியூர், வெளிநாடு செல்லலாம். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும். இதுவரை கடனை திரும்பத் தராத உறவுகள் கடனை செலுத்துவார்கள். அதிக முதலீடுகள் கொண்ட தொழில் நடத்துபவர்கள் சற்று நிதானத்துடன் செயல்படவும்.

    பூமி, வீடு, வாகனம் வாங்கும் சிந்தனைகள் மேலோங்கும். ஏழில் ராகு இருப்பதால் திருமண வரன் பார்ப்பதில் கவனம் மற்றும் பொறுமை தேவை. சிலருக்கு பணிக் காலம் முடிந்தப் பிறகும் பதவி நீடிப்புகள் ஏற்படலாம். நிரந்தர வேலை கிடைக்கும்.அன்னபூரணியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    வார ராசிபலன் 9.2.2025 முதல் 15.2.2025 வரை

    9.2.2025 முதல் 15.2.2025 வரை

    அனுபவ அறிவு வெளிப்படும் காலம். 2,9-ம் அதிபதி சுக்ரன் ராசிக்கு 7-ல் உச்சம். செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும். பேச்சை மூலதனமாக கொண்டவர்கள் பேங்கிங், ஆடிட்டிங், ஆசிரியர் பணி போன்றவற்றில் இருப்பவர்களின் வாழ்வாதாரம் உயரும். நண்பர்கள் தொழில் கூட்டணிகள் வாடிக்கையாளர்களோ, வாழ்க்கை துணை மூலம் சாதகமான சூழ்நிலை உருவாகலாம். கல்வி சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். கடன் பிரச்சனைகள் குறையும்.கவுரவப் பதவி, கவுரவப் பட்டம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு திருமணம் செய்து மருமகள், மருமகன் பேரன் பேத்தி பார்க்க முடியும். புதிய தொழில் சார்ந்த சிந்தனைகள் உருவாகும்.

    அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு அதிகமாகும். அவரவரின் தசாபுத்திக்கு மத நம்பிக்கை குறையும் அல்லது அதிகமாகும். இந்த காலகட்டத்தில் பிறரின் மனதை புண்படுத்தக்கூடிய வெளிப்படையான பேச்சுக்களை தவிர்த்தல் நல்லது. குருவின் வீட்டிற்கும் நுழையும் சுக்ரனால் மிகப் பெரிய வாழ்வியல் மாற்றம் உண்டு. எதிர்பாலினத்திடம் கவனமாக பழக வேண்டும். தைப்பூச நன்னாளில் பச்சைக் கற்பூர அபிசேகம் செய்து முருகனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    வார ராசிபலன் 2.2.2025 முதல் 8.2.2025 வரை

    2.2.2025 முதல் 8.2.2025 வரை

    சிறப்பான வாரம். குரு, சுக்ரன் பரிவர்த்தனை. தைரியம், தெம்பு அதிகமாகும். புதிய சிந்தனைகள் புது விதமான தேடல்கள் அதிகமாகும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சொந்தங்களாலும், சொத்துக்களாலும் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும். அக்கம், பக்கம் உள்ளவர்களுடன் நல்லிணக்கம் ஏற்படும். மனதிற்கு பிடித்த இடத்திற்கு வீடு மாற்றம் செய்வீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும். வீடு மனை பூமி தொடர்பான நெடுநாள் கனவுகள் நிறைவேறும். அதிக சம்பளத்திற்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும்.

    சங்கடத்தில் ஆழ்த்திய நோய் வைத்தியத்திற்கு கட்டுப்படும். குடும்பத்துடன் ஆடம்பர விருந்து மற்றும் விழாக்களில் கலந்து கொள்வீர்கள். தொழில் உத்தியோக நிமித்தமாக அடிக்கடி பிரயாணம் செய்ய நேரும். 3.2.2025 அன்று இரவு 11.17 மணி முதல் 6.2.2025 அன்று 2.16 மணி காலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எளிமையாக முடிய வேண்டிய வேலைகள் இழுபறி யாகும். அடுத்தவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகளால் விரோதம் உண்டாகும். கருட வழிபாடு செய்யவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    வார ராசிபலன் 26.1.2025 முதல் 1.2.2025 வரை

    26.1.2025 முதல் 1.2.2025 வரை

    காரிய சித்தி உண்டாகும் வாரம். ராசி அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியனுடன் சஞ்சரிப்பது புத ஆதித்ய யோகம். பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுவதால் தன்நிறைவோடு வாழ முடியும். குலதெய்வ அனுகிரகத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதிர்ஷ்ட வருமானம் கூடும். அதிர்ஷ்டம் பற்றிய சிந்தனை கூடும். தேவையற்ற பேச்சுக்கள், வாக்கு வாதங்கள் குறையும். பூர்வீகச் சொத்து தொடர்பான உயில் எழுத பேச்சுவார்த்தை நடத்த உகந்த நேரம். எல்லைத் தகராறு, நிலத்தகராறு, வாய்க்கால் தகராறு, பட்டா சார்ந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

    ஜாமீன் வழக்கில் தீர்ப்பு சாதகமாகும்.தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த பெற்றோர்கள் மீண்டும் சேருவார்கள். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய பய உணர்வு அகலும். புதிய நட்புகளால் சந்தோஷம் உண்டாகும். மாற்று முறை சிகிச்சையால் நோய்க்கு தீர்வு கிடைக்கும். தை அமாவாசையன்று வயதானவர்களுக்கு காலணிகள், போர்வைகள் வாங்கி தானம் தரவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    வார ராசிபலன் 19.1.2025 முதல் 25.1.2025 வரை

    19.1.2025 முதல் 25.1.2025 வரை

    பொறுப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசிக்கும் ராசி அதிபதி புதனுக்கு அஷ்டமாதிபதி செவ்வாயின் 4-ம் பார்வை உள்ளது.சொத்து தொடர்பான செயல்களில் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுப்பதை தவிர்க்கவும். சிலர் பயன்படாத சொத்துக்களை விற்று லாபம் பார்க்கலாம். சிலரின் ஆரோக்கிய குறைபாடு அறுவை சிகிச்சையில் சீராகும். சிலருக்கு விரக்தி மனப்பான்மை உருவாகும். ஆனால் குருவின் பார்வை ராசிக்கு இருப்பதால் பல மாற்றத்தையும் ஏற்றத்தையும் தரும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

    எந்த கை உங்களை விட்டாலும் நம்பிக்கையை விடாமல் இருப்பது முக்கியம். புதிய முதலீடுகளை தவிர்த்தல் நலம். பார்க்கும் வேலையை மாற்றக்கூடாது. நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் கிடைக்கும். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இல்லை என்ற நிலை இனி இல்லை. சிலர் குடியிருப்பை மாற்றம் செய்யலாம். சிலருக்கு தொழில் ரீதியாகவோ, வேறு காரணத்திற்காகவோ வெளியூர், வெளிநாடு செல்ல நேரும். வேற்று மதத்தினர், இனத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் இலக்கை அடைய முடியும். ராகு கால உக்ர தெய்வ வழிபாடு சாதகமான பலன் தரும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    12.01.2025 முதல் 18.01.2025 வரை

    காரிய சித்தி உண்டாகும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் குரு மற்றும் செவ்வாயின் பார்வையில் உள்ளார். ராசி அதிபதி புதன் சுக ஸ்தானத்தில் சஞ்சாரம். கேந்திரமும், திரிகோணமும் பலம் பெறுவதால் கன்னி ராசியினர் நிம்மதி பெருமூச்சு விடலாம். கிணற்றில் விழுந்த கல்லாக இருந்த அனைத்து முயற்சிகளும் பலிதமாகும். வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாமல் தவித்தவர்கள் கடனில் இருந்து மீளக் கூடிய மார்க்கம் தென்படும்.

    பூர்வீகச் சொத்துக்களை பிரிப்பதில் ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தால் இப்பொழுது சரியாகிவிடும். தந்தை வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு குறையும். பல தலைமுறையாக பித்ரு தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஜாதகத்தை சரிபார்த்து தில ஹோமம் செய்ய ஏற்ற காலம். பொங்கல் விடுமுறைக்கு புனித நீராடல், புனித தல யாத்திரை சென்று வர வாய்ப்பு கிடைக்கும். முதல் திருமணம் தோல்வியில் முடிந்த சிலருக்கு இரண்டாவது திருமணம் நடக்கும் வாய்ப்பும் உள்ளது. ஆனால் முன்னோர் வழி கர்ம வினை தாக்க நோய் ஆரம்பமாகும் அல்லது அதிகமாகும். உடல் அசதி உருவாகும்.

    பவுர்ணமியன்று சப்த மாதர்களை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×