வார ராசிபலன் 26.10.2025 முதல் 1.11.2025 வரை
26.10.2025 முதல் 1.11.2025 வரை
கன்னி
தடை தாமதங்கள் அகலும் வாரம். ராசி அதிபதி புதன் 3ம்மிடமான வெற்றி ஸ்தானத்தில் 3ம் அதிபதி செவ்வாயுடன் குருவின் பார்வையில் சேர்க்கை பெற்றுள்ளார். போட்டி பொறாமைகளை சமாளித்து முன்னேற கூடிய வகையில் தைரியமும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். தாய் வழிச் சொத்தில் சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறையும்.
மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். காணாமல் போன உயில் பத்திரம் கிடைக்கும். நண்பர்கள், நிதி நிறுவனங்கள் மூலம் பண உதவி கிடைக்கும். இதுவரை ஒத்திவைத்த அறுவை சிகிச்சைக்காக மருத்துவ மனைக்குச் செல்ல நேரும். கமிஷன் அடிப்படையில் தொழில் புரிபவர்களுக்கு மிகைப்படுத்தலான நன்மைகள் உண்டு.
ஜாமீன் சார்ந்த பிரச்சினைகள் நீங்கும். வீடு வாகனங்களை பழுது நீக்கம் செய்வீர்கள். நல்ல வேலை கிடைக்கும். திருமணத்தடை அகலும். மறு விவாக முயற்சிகள் சாதகமாகும். லவுகீக வாழ்வில் நாட்டம் மிகும். கந்த சஷ்டி அன்று தயிர் அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406