வார ராசிபலன் 16.11.2025 முதல் 22.11.2025 வரை
16.11.2025 முதல் 22.11.2025 வரை
கன்னி
முயற்சிகள், எண்ணங்கள் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி புதன் வெற்றி ஸ்தானத்தில் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். நல்லவர்களுடன் நட்பு ஏற்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். அரசு உத்தியோகத்திற்கு பணி நியமன ஆணை கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த அனைத்து சிக்கலும் தீரும்.
குடும்ப உறவுகளுடன் கருத்து ஒற்றுமை அதிகமாகும். நீண்ட நாட்களாக உங்கள் எதிர்பார்ப்பிற்கு கிடைக்காத வரன் இப்பொழுது கிடைக்கும். சில விவாகரத்தான தம்பதிகள் மீண்டும் சேரும் வாய்ப்பு உருவாகும். சிலருக்கு அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு உண்டாகும். கண்டகச் சனியினால் ஏற்பட்ட பாதிப்புகள் சீராகும்.
பங்குச் சந்தையில் அதிக முதலீடு வைத்து இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இழுபறியில் இருந்து வந்த நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். வெகு நாட்களாக பாதித்த கடன் தொல்லையில் இருந்து மீள தேவையான நிதி உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியகேடு வைத்தியத்தில் சீராகும். புதன் கிழமை சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406