கன்னி - வார பலன்கள்

வார ராசிபலன் 7.12.2025 முதல் 13.12.2025 வரை

Published On 2025-12-07 10:14 IST   |   Update On 2025-12-07 10:15:00 IST

7.12.2025 முதல் 13.12.2025 வரை

கன்னி

தர்மம் தலைகாக்கும் நேரம். ராசி அதிபதி புதன் தனாதிபதி சுக்ரனுடன் சேருவது தர்மகர் மாதிபதி யோகம். மாற்றமும் ஏற்றமும் தேடிவரும். வருமானம் அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக நடக்கும். அதிர்ஷ்டம், போட்டி, பந்தயம் போன்றவை உங்களின் வருமானத்தை பெருக்கும். தொழில் போட்டிகளை தாண்டி தனி முத்திரை பதிப்பீர்கள்.

வியாபாரத்தில் இருந்த அரசாங்கத் தடைகள் நீங்கும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்சினைகளை பேசி தீர்ப்பீர்கள். குடும்ப உறவுகளிடம் இணக்கம் உண்டாகும். ஆனால் விரயாதிபதி சூரியனுடன் சேர்க்கை பெறுவதால் வரவிற்கு மீறிய செலவுகளால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். வாடகை வீட்டுப் பிரச்சினையில் இருந்து விடுபட்டு சொந்தமாக அபார்ட்மென்ட் வாங்கி குடியேறுவீர்கள்.

உங்கள் மீது வெறுப்பை உமிழ்ந்த உயரதிகாரியின் மனநிலை மாறி ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். பங்குதாரர், வாழ்க்கைத் துணையால் ஆதாயம் கிடைக்கும். பெண்கள் கணவரின் தொழில், உத்தியோக உயர்வால் நிம்மதி அடைவார்கள். தினமும் அபிராமி அந்தாதி படிப்பதால் கண்டகச் சனியால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News