வார ராசிபலன் 14.12.2025 முதல் 20.12.2025 வரை
14.12.2025 முதல் 20.12.2025 வரை
கன்னி
வெற்றிக் கனியை ருசிக்கும் வாரம். ராசி அதிபதி புதன் வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பிற இடங்களுக்கு மாற்றலும் கிடைக்கும். உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையும் உயரும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். எதிரிகள் தொந்தரவு நீங்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும்.
திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும் தொழில் போட்டிகள் குறையும். வியாபாரிகள் விற்பனையில் சாதுரியமாகப் பேசி சாதகமான பலனை அடைவார்கள். திருமணம் போன்ற சுப காரிய பேச்சுவார்த்தை நடக்கும். பாகப் பிரிவினையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.
உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அடமான நகைகள் சொத்துக்களை மீட்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். பழைய கடன்களை அடைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். சப்த மாதாக்களை வழிபட சங்கடங்கள் அகலும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406