வார ராசிபலன் 9.11.2025 முதல் 15.11.2025 வரை
9.11.2025 முதல் 15.11.2025 வரை
கன்னி
தடைபட்ட அனைத்து சுப பலன்களும் தேடிவரும் வாரம். குரு லாப ஸ்தானத்தில் அதி சாரமாக வக்கிரகதியில் சஞ்சரிப்பதால் வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளையும் வழங்கக் கூடிய உப ஜெய ஸ்தானம் வலுப்பெறுகிறது. உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டு. எதிர்பாராத வீடு, வாகனம் போன்ற சுப செலவு மிகுதியாகும். எதையும் திட்டமிட்டுச் செய்வீர்கள். நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருந்த நிலை மாறும். மனத் தடுமாற்றம் நீங்கி காரியசித்தி உண்டாகும். புகழ், அந்தஸ்தை உயர்த்த அதிகம் உழைக்க நேரும். மனம் இலகுவாக இருக்கும். முகப் பொலிவு உண்டாகும்.
பெண்களுக்கு மன உளைச்சல் நீங்கி நிம்மதி கிடைக்கும். தாயின் அன்பும் ஆசீர்வாதமும் உங்களை மகிழ்விக்கும். விரும்பிய கடன் தொகையை அரசுடைமை வங்கிகளில் பெறுவது உத்தமம். மந்தமாக இருக்கும் தொழில் மளமளவென வளரும். அரசின் இலவச வீட்டு மனைத் திட்டத்தில் வீடு, மனை கிடைக்கும். பிள்ளைகளின் திருமணம், உத்தியோகம், தொழில், உயர்கல்வி போன்ற கவலைகள் நீங்கும். கண்டகத்தில் சனி பகவான் நிற்பதால் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு முடிந்த உதவிகளை வழங்க தடையில்லாத முன்னேற்றம் ஏற்படும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406