கன்னி - வார பலன்கள்

வார ராசிபலன் 5.10.2025 முதல் 11.10.2025 வரை

Published On 2025-10-05 10:43 IST   |   Update On 2025-10-05 10:44:00 IST

5.10.2025 முதல் 11.10.2025 வரை

பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம். ராசி அதிபதி புதன் சுக்கிரனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார். மேலும் லாப ஸ்தானத்தில் குரு பகவான் உச்சமடைய போகிறார். இந்த அமைப்பு அபரிமிதமான சுப பலன்களை வழங்க உள்ள நல்ல நேரமாகும். தொழில், உத்தியோகத்தில் லாபம் சதம் அடிக்கும். புதிய தொழில் ஒப்பந்தம் தேடி வரும்.

தொழில் கூட்டாளிகளிடம் நிலவிய கருத்து வேற்றுமை மறைந்து ஒற்றுமை ஏற்படும். கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத நிலைமாறும். தடைபட்ட வாடகை வருமானம் வசூல் ஆகும். விவசாயிகளுக்கும் எதிர்பாராத லாபம் உண்டு. வீடு, மனை வாங்க முன்பணம் கொடுப்பீர்கள். வாழ்க்கை துணைக்கு விரும்பிய உத்தியோக மாற்றம் தேடி வரும்.

திருமணப் பேச்சு வார்த்தை மன நிறைவு தரும். இந்த வாரம் தீபாவளி போனஸ் கிடைக்கும். உடல்நிலை சீராகும்.8.10.2025 அன்று காலை 1.28 முதல் 10.10.2025 அன்று காலை 1.23 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நிதானமற்ற அவரச முடிவுகளைத் தவிர்ப்பது அவசியம். தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பதாலும் கேட்பதாலும் பொருளாதார மேன்மை உண்டாகும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News