விருச்சகம் - வார பலன்கள்

வார ராசிபலன் 27.7.2025 முதல் 2.8.2025 வரை

Published On 2025-07-27 10:37 IST   |   Update On 2025-07-27 10:38:00 IST

27.7.2025 முதல் 2.8.2025 வரை

திட்டங்களில் நிலவிய தடை, தாமதங்கள் அகலும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் 11ம் இடமான லாப ஸ்தானத்தில் சனி பார்வையில் சஞ்சரிக்கிறார். எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும். வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். மூத்த சகோதர, சகோதரிகள் சித்தப்பாவுடன் நல்லிணக்கம் உண்டாகும்.

வசீகரமான தோற்றப் பொழிவு உண்டாகும். உங்களின் முன்னேற்றம் ஆச்சரியப்படும் விதத்தில் இருக்கும். உடலில் இருந்த பிணிகள் ஓடி ஒளியும். தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். உணவுப் பொருள் ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு ஏற்ற காலம். சிலருக்கு பழைய தொழிலில் இருந்து விடுபட்டு புதிய தொழில் செய்யும் ஆர்வம் அதிகமாகும்.

பணப்புழக்கம் அதிகரிப்பதால் ஆடம்பரச் செலவு செய்யும் வகையில் வாழ்வாதாரம் உயரும். குரு தீட்சை, ஆன்மீகப் பெரியோர்களின் ஆசி கிட்டும். தந்தையின் வாரிசு அரசு வழி வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு அது கைகூடும். தாய்மை அடைந்த பெண்களுக்கு இந்த வாரம் குழந்தை பிறக்கும். நாக சதுர்த்தி அன்று இடுப்பில் சர்ப்பம் தரித்த விநாயகரை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News