விருச்சகம் - வார பலன்கள்

வார ராசிபலன் 9.11.2025 முதல் 15.11.2025 வரை

Published On 2025-11-09 10:43 IST   |   Update On 2025-11-09 10:44:00 IST

9.11.2025 முதல் 15.11.2025 வரை

விருச்சிகம்

அனுகூலமான வாரம். ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெறுகிறார். உடன் இணைந்த 8, 11-ம் அதிபதி புதன் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். பணபரஸ்தான இயக்கம் வலுவாக உள்ளதால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். லாட்டரி, பங்குச் சந்தை, உயில் சொத்து, பாலிசி முதிர்வு தொகை மூலம் பெரும் பணம் கிடைக்கும். மூத்த சகோதர வழியில் சில பொருள் வரவு ஏற்படலாம். புதிய தொழில் முயற்சிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். குலத் தொழில் விருத்தியடையும்.

சிலர் புதிய இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை சீராகும். சிலர் கூட்டுக் குடும்பத்தில் இருந்து பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்தில் கிடைத்த பங்கு புகுந்த வீட்டில் கவுரவப்படுத்தும். 10.11.2025 அன்று பகல் 1.03 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய பணிகளை ஒத்தி வைக்கவும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. கோட்சார கிரகங்கள் சாதகமாக இல்லாத காலத்தில் மனிதனுக்கு பொறுமையும் தன்னம்பிக்கையும் மிக அவசியம். தினமும் முருகனை வழிபட வினைகள் தீரும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News