விருச்சகம் - வார பலன்கள்

வார ராசிபலன் 30.11.2025 முதல் 6.12.2025 வரை

Published On 2025-11-30 10:29 IST   |   Update On 2025-11-30 10:29:00 IST

30.11.2025 முதல் 6.12.2025 வரை

விருச்சிகம்

திறமைகளால் மதிப்பு உயரும் வாரம். ராசியில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை உள்ளது. ஆன்ம பலம், ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். உடல் தேஜஸ் கூடும். கவுரவப் பதவிகள் கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சுய திறமையால் நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அலைச்சல் மிகுந்த பயணங்கள் அதிகரிக்கும். இடப்பெயர்ச்சியால் சில நன்மைகள் ஏற்படும்.

நோய் தொந்தரவுகள் அகலும். சில பெண்களை அச்சுறுத்திய மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். கடன்தர நிதி நிறுவனங்கள், வங்கிகள் தேடி வரும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உயர் கல்வியில் நிலவிய தடைகள் அகலும். 5.12.2025 அன்று இரவு 10.15 முதல் 7.12.2025 அன்று இரவு 10.38 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நட்புகளிடம் விவேகமான வார்த்தைகளை பேச வேண்டும்.

நண்பர்கள், தொழில் கூட்டாளிகளிடம் கவனமாக பழகவும். திருக்கார்த்திகை நாளில் விரதம் இருந்து சிவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட இன்னல்கள் விலகும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News