விருச்சகம் - வார பலன்கள்

வார ராசிபலன் 11.1.2026 முதல் 17.1.2026 வரை

Published On 2026-01-11 11:06 IST   |   Update On 2026-01-11 11:08:00 IST

11.1.2026 முதல் 17.1.2026 வரை

விருச்சிகம்

தன்னம்பிக்கையான வாரம். ராசி அதிபதி செவ்வாய் மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்தில் உச்சம் அடைகிறார்.ஜாதகரின் முயற்சி எளிதில் வெற்றி பெறும். வார ஆரம்பத்தில் தொழிலில் மந்த போக்கு நிலவினாலும் நிலையான முன்னேற்றத்தை எட்டி பிடிப்பீர்கள். பெயர், புகழ், அந்தஸ்து, கவுரவம் உயரும். பெரிய மனிதர்களின் தொடர்பு அரசியல் செலவு ஏற்படலாம். உடன் பிறந்தவர்களின் அன்பும் அனுசரணையும் இருக்கும். பாகப்பிரிவினைகள் சுமூகமாகும்.

ஒரு நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் அதற்கு நீங்களே காரணமாக இருப்பீர்கள். மனதில் நிலவிய வெறுமை தேவையில்லாத கற்பனை பய உணர்வு குறையும். இடப்பெயர்ச்சி நடக்கும். கடன் தொல்லை அதிகரிக்கும். தேவையற்ற வழக்குகள் மற்றும் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு விபரீத ராஜ யோகத்தால் அதிர்ஷ்ட சொத்து, நகை, பணம், பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும். நவீனகரமான பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். பெண்களுக்கு புகுந்த வீட்டினரின் பாராட்டும் அன்பும் கிடைக்கும்.விநாயகரை வழிபட தடைகள் அகலும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News